தப்பிய தவான்.. ராகுலுக்கு வாய்ப்பு.. 4 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி!!

By karthikeyan VFirst Published Mar 10, 2019, 1:23 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால் உலக கோப்பை அணியில் பரிசீலனையில் இருக்கும் சில வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் மூன்று போட்டிகளில் அப்படியான வாய்ப்பு எதுவும் யாருக்கும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், நான்காவது போட்டியில் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வென்றுள்ளது. நான்காவது போட்டி இன்று மொஹாலியில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்த போட்டியில் ரோஹித் - தவான் தொடக்க ஜோடியில் மாற்றம் செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக சொதப்பிவரும் ராயுடுவுக்கு பதிலாக ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தவான் தொடர்ச்சியாக சொதப்பிவந்த நிலையில், அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ராகுல், ரோஹித்துடன் தொடக்க வீரராக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவான் நீக்கப்படவில்லை. தவான் சரியாக ஆடாவிட்டாலும் அவர் இந்திய அணியின் அசைக்கமுடியாத சக்தி என பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்திருந்தார். அதன்படியே தவான் அணியிலிருந்து நீக்கப்படவில்லை. ராயுடுவை நீக்கிவிட்டு ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனவே முதல் விக்கெட் விரைவில் விழும் பட்சத்தில் ராகுல் மூன்றாவது வரிசையிலும் கோலி நான்காம் வரிசையிலும் இறங்க வாய்ப்புள்ளது. தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் ஆடுவது ஏற்கனவே உறுதியான ஒன்று. அதேபோல ஷமிக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் களமிறக்கப்பட்டுள்ளார். இதுவும் தெரிந்த விஷயம்தான். 

ஜடேஜாவிற்கு பதிலாக சாஹலுக்கு இந்த போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று போட்டிகளிலுமே சாஹல் ஆடாத நிலையில், இந்த போட்டியில் ஜடேஜாவை நீக்கிவிட்டு சாஹலை அணியில் சேர்த்துள்ளனர். 

இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் சங்கர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா. 
 

click me!