ராகுல் - ரிஷப் பண்ட் 2 பேருமே வேண்டாம்..! தோனிக்கு பக்கா மாற்று விக்கெட் கீப்பர் அந்த பையன் தான்

By karthikeyan VFirst Published May 30, 2020, 9:06 PM IST
Highlights

இந்திய அணியில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் ராகுலும் இல்லை, ரிஷப்பும் இல்லை என்று புதிதாக மற்றொரு இளம் வீரரின் பெயரை தெரிவித்துள்ளார் ராபின் உத்தப்பா. 
 

இந்திய அணியில் 2004ம் ஆண்டு தோனி அறிமுகமானார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பைக்கு பின்னர் தோனி இந்திய அணியில் ஆடவில்லை. தோனி இந்திய அணிக்கு ஆட தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகளுக்கு இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் சிக்கல் இல்லை. 

தனது திறமையாலும் புத்திசாலித்தனத்தாலும் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்து, ஆல்டைம் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக திகழ்ந்தார். கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பைக்கு பின்னர் தோனி இந்திய அணியில் ஆடவில்லை. தோனி உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு அறிவிக்காத தோனி, இந்திய அணியில் ஆடவும் இல்லை. 

தோனி ஓய்வு அறிவிக்கவில்லையென்றாலும், அவரது கெரியர் முடிந்துவிட்டது. இனிமேல் அவர் இந்திய அணியில் ஆடுவதற்கான வாய்ப்பில்லை. எனவே தோனிக்கு அப்பாற்பட்டு இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக உருவாக்கப்பட்டார். ஆனால் அவர் தொடர்ச்சியாக விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சொதப்பினார். 

ஒவ்வொரு சொதப்பலின்போதும், அணியில் தனது இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவந்தார் ரிஷப் பண்ட்.  இதற்கிடையே, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கேஎல் ராகுலுக்கு விக்கெட் கீப்பராக செயல்படும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்ட ராகுல், அதன்பின்னர் தொடர்ச்சியாக நியூசிலாந்து தொடரிலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ராகுல் தான் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். 

ராகுலே விக்கெட் கீப்பிங்கும் செய்வதால் மிடில் ஆர்டரில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதால், அணி நிர்வாகமும் இப்போதைக்கு ராகுலையே விக்கெட் கீப்பராக பயன்படுத்தும் எண்ணத்தில் தான் உள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் குறித்து ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டி ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய இளம் வீரர் ரியான் பராக், தோனிக்கு சரியான மாற்றாக இருப்பார் என்று உத்தப்பா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள உத்தப்பா, சமீபத்தில் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்றால் அது ரியான் பராக் தான். அவரது ஆட்டத்தை பார்த்து நான் வியந்தே போனேன். ரியான் பராக் மிகச்சிறந்த வீரர். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்படுகிறார். இந்திய அணிக்காக கண்டிப்பாக நீண்டகாலம் அவர் ஆடுவார். இந்திய அணியில் தோனிக்கு சரியான மாற்றாக அவர் இருப்பார் என்று உத்தப்பா தெரிவித்துள்ளார். 

ரியான் பராக்கை கடந்த ஐபிஎல் சீசனின்போது, அவரது ஆட்டத்தை பார்த்து ஸ்டீவ் ஸ்மித் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. 
 

click me!