டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

Published : Aug 01, 2021, 08:11 PM IST
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

சுருக்கம்

டி20 உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி தேர்வு செய்துள்ளார்.  

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர்  17 தொடங்கி நவம்பர் 14 வரை நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி உட்பட அனைத்து அணிகளுமே தீவிரமாக தயாராகிவருகின்றன.

இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக்கூட வெல்லவில்லை என்ற தன் மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. இந்திய அணி வெல்வதற்கு அணி தேர்வு மிக முக்கியம்.

அந்தவகையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் ரிதீந்தர் சோதி தேர்வு செய்துள்ளார். அதன்படி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாகவும் ஷிகர் தவானை மாற்று தொடக்க வீரராகவும் தேர்வு செய்துள்ளார் சோதி. விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்) ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

ஆல்ரவுண்டர்களாக ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும், ஸ்பின்னர்களாக சாஹல், ராகுல் சாஹர் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகிய நால்வரையும் தேர்வு செய்துள்ளார் ரிதீந்தர் சோதி.

ரிதீந்தர் சோதி தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஜடேஜா, ராகுல் சாஹர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை! மேக்ஸ்வெல் ரெக்கார்டு ஊதி தள்ளிய 15 வயதான இளம் வீரர் வைபவ்!
Most T20 Centuries: டி20-ல் அதிக சதம்..! கோலியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்..!