Rishabh Pant: தோனியே செய்திராத சாதனையை செய்து கில்கிறிஸ்ட்டுடன் இணைந்த ரிஷப் பண்ட்

Published : Mar 15, 2022, 05:36 PM IST
Rishabh Pant: தோனியே செய்திராத சாதனையை செய்து கில்கிறிஸ்ட்டுடன் இணைந்த ரிஷப் பண்ட்

சுருக்கம்

தோனியே செய்திராத சாதனையை செய்து ஆஸ்திரேலிய முன்னாள் லெஜண்ட் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் ரிஷப் பண்ட்.  

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-0 என ஒயிட்வாஷ் செய்து வென்றது. இந்த தொடரில் பேட்டிங், விக்கெட் கீப்பிங், டி.ஆர்.எஸ் எடுப்பதி உதவி என அனைத்துவகையிலும் தனது பணியை  செவ்வனே செய்ததுடன், இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய பங்கு வகித்த ரிஷப் பண்ட் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

தொடர் நாயகன் ரிஷப் பண்ட்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 120.12 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 185 ரன்களை குவித்த ரிஷப் பண்ட், 2வது டெஸ்ட்டில் 28 பந்தில் அரைசதம் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

ரிஷப் பண்ட் சாதனை:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். 

இதற்கு முன் எந்த இந்திய விக்கெட் கீப்பரும் டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றதில்லை. 90 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முன்னாள் லெஜண்ட் விக்கெட் கீப்பர் தோனி, ஒரு தொடர் நாயகன் விருதைக்கூட வென்றதில்லை. 30 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கும் ரிஷப் பண்ட் தொடர் நாயகன் விருதை வென்றுவிட்டார்.

இதற்கு முன் ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் டெஸ்ட் தொடரில் 3 முறை தொடர் நாயகன் விருதை வென்றிருக்கிறார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!