வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் அணி நிர்வாகத்திடம் பிட்டு போட்ட இந்திய வீரர்

By karthikeyan VFirst Published Jul 26, 2019, 4:50 PM IST
Highlights

தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் இந்திய அணியில் அவருக்கு இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே அவரது 5ம் இடமும் நிரப்பப்பட வேண்டும். கேதர் ஜாதவிற்கும் இனிமேல் பெரிதாக வாய்ப்பிருக்காது. எனவே 4,5,6 ஆகிய மூன்று வரிசைகளுக்கான இடமும் நிரப்பப்பட்டாக வேண்டும். 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, உலக கோப்பையில் தோற்று வெளியேறியதற்கு காரணம், மிடில் ஆர்டர் சிக்கல் தான். 2 ஆண்டுகள் தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான மிடில் ஆர்டர் வீரர்களை தேர்வு செய்ய முடியவில்லை. அதன் எதிரொலியாக இந்திய அணி உலக கோப்பையில் தோற்று வெளியேறியது. 

உலக கோப்பை தொடரின் தொடக்கத்தில் ராகுல் தான் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். ஆனால் தவான் காயத்தால் தொடரின் பாதியில் விலகியதை அடுத்து ராகுல் தொடக்க வீரராக இறங்கியதால், விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். விஜய் சங்கரும் காயத்தால் வெளியேறியதால் ரிஷப் பண்ட் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறிய நிலையில், மிடில் ஆர்டர் சிக்கலுக்கு நீண்டகால தீர்வை தேட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20க்கான அணியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக மனீஷ் பாண்டே  மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். 

தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் இந்திய அணியில் அவருக்கு இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே அவரது 5ம் இடமும் நிரப்பப்பட வேண்டும். கேதர் ஜாதவிற்கும் இனிமேல் பெரிதாக வாய்ப்பிருக்காது. எனவே 4,5,6 ஆகிய மூன்று வரிசைகளுக்கான இடமும் நிரப்பப்பட்டாக வேண்டும். ரிஷப் பண்ட் உலக கோப்பையில் நான்காம் வரிசையில் இறங்கிய நிலையில், மனீஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். 

மனீஷ் மற்று ஐயர் அணியில் இணைந்துள்ளதால், எங்கே தனது நான்காம் வரிசைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கருதிய ரிஷப் பண்ட், தான் நான்காம் வரிசையில் ஆடுவதை மிகவும் விரும்புவதாகவும் தனக்கு அந்த வரிசையில் இறங்குவது புதிதல்ல என்றும் ரிஷப் பண்ட், அணி நிர்வாகத்திற்கு ஒரு பிட்டை போட்டுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ரிஷப் பண்ட், நான்காம் வரிசையில் பேட்டிங் செய்வதை நான் மிகவும் விரும்புகிறேன். இது எனக்கு புதிதல்ல. ஐபிஎல்லில் கூட நான்காம் வரிசையில் ஆடியிருக்கிறேன். நான்காம் வரிசைக்காகவே நான் தயாராகியிருக்கிறேன். எனது ஆட்டபாணி என்றெல்லாம் ஒன்று கிடையாது. நான் எப்போதுமே சூழலுக்கு ஏற்றவாறுதான் ஆடுவேன். என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. ஏனெனில் நான் செய்தித்தாள்கள் படிக்கமாட்டேன் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். 
 

click me!