IPL 2024: மீண்டும் அறிமுகமாவது போன்று உணர்கிறேன் – ரிஷப் பண்ட்!

By Rsiva kumar  |  First Published Mar 13, 2024, 5:36 PM IST

மீண்டும் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகப் போகிறேன் என்று டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.


கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தீவிர சிகிச்சைக்கு பிறகு கிட்டத்தட்ட 14 மாதங்கள் ஓய்வில் இருந்தார். கார் விபத்திற்கு பிறகு எந்த தொடரிலும் ரிஷப் பண்ட் பங்கேற்கவில்லை. அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் இருந்தார்.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ரிஷப் பண்ட் குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்தார். ரிஷப் பண்ட் நன்றாக பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் செய்கிறார். விரைவில் உடல் தகுதியை அறிவிப்போம். டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் விளையாடினால், அது பெரிய விஷயமாக இருக்கும். இந்திய அணியின் சொத்து ரிஷப் பண்ட். அவர், நன்றாக விக்கெட் கீப்பிங் செய்ய முடிந்தால் கண்டிப்பாக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார். இதனால், அவர் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடுகிறார் என்பதை உற்று நோக்குவோம் என்று கூறியிருந்தார்.

Tap to resize

Latest Videos

ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து பிசிசிஐ அப்டேட் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு என்சிஏவில் தீவிர பயிற்சிக்கு பிறகு பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால், வரும் ஐபிஎல் 2024 தொடரில் ரிஷப் பண்ட் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் தற்போது 14 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அணியுடன் திரும்பியுள்ளார். இது குறித்து ரிஷப் பண்ட் கூறியிருப்பதாவது: அணியுடன் மீண்டும் இணையும் அதே நேரத்தில் உற்சாகமாகவும் பதட்டமாகவும் இருக்கிறேன். நான் மீண்டும் அறிமுகமாகப் போகிறேன் என்று உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

💙❤️ pic.twitter.com/pIbw8CB6v2

— Delhi Capitals (@DelhiCapitals)

 

click me!