ஒரே கையால் பேட் செய்த குரு – சிஷ்யன், தோனி – ரிஷப் பண்ட் புகைப்படம் வைரல்!

By Rsiva kumar  |  First Published Apr 1, 2024, 11:20 AM IST

விசாகப்பட்டினத்தில் நடந்த டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் தோனி இருவரும் ஒரே கையால் சிக்ஸர் அடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 13ஆவது ஐபிஎல் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 52 ரன்களும், ரிஷப் பண்ட் 51 ரன்களும் எடுத்துக் கொடுத்தனர்.

பின்னர் 192 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கெய்க்வாட் 1, ரச்சின் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அஜின்க்யா ரகானே மற்றும் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி 3ஆவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். மிட்செல் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Tap to resize

Latest Videos

ரகானே 45 ரன்களில் நடையை கட்டினார். சிக்ஸர் மன்னர் என்று அழைக்கப்படும் ஷிவம் துபே 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சமீர் ரிஸ்வி ரன் ஏதும் எடுக்காமல் நடையை கட்டினார். கடைசியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். தோனி வந்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாச விசாகப்பட்டினத்தில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். தோனி தோனி என்று கோஷம் எழுப்பினர்.

ஆனால், 2ஆவது பந்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆஃப் சைடு பாய்ண்ட் திசையில் நின்றிருந்த கலீல் அகமது கோட்டைவிட்டார். சிஸ்கே 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 19ஆவது ஓவரில் சிஎஸ்கே 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் தோனி களத்தில் இருந்தார். அந்த ஓவரில் தோனி 4, 6, 0, 4, 0, 6 என்று வரிசையாக 20 ரன்கள் விளாசினார்.

கடைசி வரை களத்தில் நின்ற தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்கள் எடுத்தார். இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டும் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் ஒரு கையால் சிக்ஸர் அடித்தார். இதே போன்று தோனியும் ஒரே கையால் சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார்.

click me!