வெஸ்ட் இண்டீஸ் நம்மை தட்டி எழுப்பிருக்காங்க.. உடனே முழிச்சுக்கலைனா இந்தியாகிட்ட செமத்தியா வாங்குவோம்!! பாண்டிங் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 8, 2019, 11:51 AM IST
Highlights

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியிருந்தாலும், 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு ஒரு பயத்தை எற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்திய அதே ஷார்ட் பிட்ச் பந்துகளை போட்டே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள், ஆஸ்திரேலிய டாப் ஆர்டரை சரித்தனர். 

உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடிய முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. அடுத்த போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டி நாளை நடக்கிறது. 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நாட்டிங்காமில் நேற்று முன் தினம் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. எனினும் ஸ்மித் - அலெக்ஸ் கேரியின் பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர குல்டர்நைலின் அதிரடி ஆகியவற்றின் விளைவாக 288 ரன்களை குவித்தது. 

289 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோப், பூரான், கேப்டன் ஹோல்டர் ஆகியோர் சிறப்பாக ஆடியபோதும், ஒரு நிலையான பார்ட்னர்ஷிப் அமையாததால் கடைசியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியிருந்தாலும், 38 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு ஒரு பயத்தை எற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்திய அதே ஷார்ட் பிட்ச் பந்துகளை போட்டே வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள், ஆஸ்திரேலிய டாப் ஆர்டரை சரித்தனர். பந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனதால், அதை பயன்படுத்தி ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி 38 ரன்களுக்குள்ளாகவே ஃபின்ச், வார்னர், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல் ஆகிய நால்வரையும் வீழ்த்திவிட்டனர். 

ஷார்ட் பிட்ச் பந்துகளை உஸ்மான் கவாஜாவுக்கு சரியாக ஆட தெரியவில்லை. மேக்ஸ்வெல்லும் தவறான மற்றும் மொக்கையான ஷாட் அடித்து ஆட்டமிழந்தார். எனவே அதே உத்தியை இந்திய பவுலர்களும் கையாளக்கூடும் என்பதால், அப்போதும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சொதப்பினால் அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். 

எனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பட்ட அடியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு வீரர்கள் விழித்தெழ வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் உலக கோப்பைக்கான துணை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகத்திற்கு பேட்டியளித்த ரிக்கி பாண்டிங், உஸ்மானும் மேக்ஸ்வெல்லும் ஷார்ட் பிட்ச் பந்தை சரியாக ஆடாமல் விக்கெட்டை இழந்தனர். பேட்ஸ்மேனின் மனதுக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நான் அறிய விரும்புகிறேன். ஏனெனில் என்னதான் திட்டங்கள் வைத்திருந்தாலும், அந்த நேரத்தில் நமது மனதுக்குள் என்ன ஓடுகிறது என்பதுதான் முக்கியம். சரியான மனநிலை இல்லாததன் வெளிப்பாடுதான் மொக்கையான ஷாட்டுகள் ஆடுவதற்கு காரணம். மேக்ஸ்வெல் அடித்ததும் மிக மோசமான ஷாட். அவர்களிடம் இதுகுறித்து விவாதிக்க உள்ளேன். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி ஒரு மிகச்சிறந்த பாடம். ஆஸ்திரேலிய அணிக்கான அலாரம். இதிலிருந்து பாடம் கற்று மேலும் வலுவாக மீண்டெழ வேண்டும். சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்டிருக்கும் இந்திய அணிக்கு எதிராக எப்படி ஆடவேண்டும் என்ற சிந்தனை மட்டுமே இருக்கிறது என்று பாண்டிங் தெரிவித்தார். 
 

click me!