லெஜண்ட் பாண்டிங்கின் கணிப்பையே தவறாக்கிய வில்லியம்சன்.. மெக்கல்லம் தான் தீர்க்கதரிசி.. அவரு சொன்னது அப்படியே நடந்துருச்சு

By karthikeyan VFirst Published Dec 5, 2019, 2:53 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வில்லியம்சன் திகழ்கிறார். விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வரும் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். 

விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவருக்கும் சற்று சளைத்தவரல்ல வில்லியம்சன். திறமையான பேட்ஸ்மேன் மட்டுமல்லாது மிகச்சிறந்த கேப்டனும் கூட. அவரது பேட்டிங்கை விட கேப்டன்சிக்காகத்தான் மிகவும் பாராட்டப்படுகிறார். 

வில்லியம்சன், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் நிலையில், ரிக்கி பாண்டிங் வில்லியம்சன் குறித்த தனது ஆரம்பகால மதிப்பீட்டையும், வில்லியம்சனின் விஸ்வரூபத்தையும் பற்றி பேசியுள்ளார் பாண்டிங்.

வில்லியம்சன் குறித்து பேசிய பாண்டிங், வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான புதிதில், இந்த பையன் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்வான் என்று மெக்கல்லம் என்னிடம் தெரிவித்தார். நான், உண்மையாகவா? பார்த்தால் அப்படி தெரியவில்லையே.. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே செல்லும் பந்துகளை சரியாக ஆடுவதில்லை, மிகவும் கடினமாக பந்தை அடிக்கிறார் என்று மெக்கல்லமிடம் கூறினேன். 

ஆனால் இப்போது அவரது ஆட்டத்தை பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. பந்தை நன்றாக விட்டு, தாமதமாக ஆடுகிறார். சிறப்பாக ஆடி சீராக ரன்களை குவித்துவருகிறார். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக, சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தை போலவே ஆடுகிறார். பந்தை நன்றாக உள்ளே விட்டு தாமதமாக ஆடுகிறார். அவரை அவுட்டாக்குவது மிகவும் கடினம். ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்களுக்கு எதிராக அவர் ஆடுவதை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். 

click me!