இந்த தடவை கண்டிப்பா அந்த பையனுக்கு டீம்ல இடம் இருக்கு.. முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Dec 5, 2019, 1:16 PM IST
Highlights

இந்தியாவிற்கு வந்த வங்கதேச அணியை வீழ்த்தி டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு தொடர்களையும் வென்ற இந்திய அணி, அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது. 

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருவதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் டி20 அணியில் நிரந்தர இடம் பிடித்துவிட்டனர். 

மனீஷ் பாண்டே சையத் முஷ்டாக் அலி தொடரில் அபாரமாக ஆடியிருப்பதால் அவருக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ஆடுவார். முக்கியமான கேள்வி, ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக இறங்குவார் என்பதுதான். ஏனெனில் தவான் காயத்தால் வெளியேறியதால், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். 

தவான் இல்லாத நிலையில், கேஎல் ராகுல் தான் தொடக்க வீரர் என்பது உறுதியான ஒன்று. அதனால் கேஎல் ராகுல் இனிமேல் ஆடித்தான் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மிடில் ஆர்டர் வீரர்கள் நிறைய பேர் இருப்பதால், சஞ்சு சாம்சனுக்கு மிடில் ஆர்டரில் வாய்ப்பளிக்க முடியாது என்பதால், சாம்சனுக்கு தொடக்க வீரராக வாய்ப்பளிக்க வாய்ப்புள்ளது. 

ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக ஷிவம் துபே ஆடுவார். ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தரும், ஜடேஜா-க்ருணல் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவரும் ஆட வாய்ப்புள்ளது. 

முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா/க்ருணல் பாண்டியா, புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர்.
 

click me!