கேட்ச்சை கோட்டைவிட்ட விக்கெட் கீப்பர்களில் ரிஷப் பண்ட் தான் டாப்.! நக்கலும் அடித்து அறிவுரையும் சொன்ன பாண்டிங்

By karthikeyan VFirst Published Jan 8, 2021, 6:24 PM IST
Highlights

ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான பின், அதிகமான கேட்ச்களை கோட்டைவிட்ட விக்கெட் கீப்பர்களில் அவர்தான் முதலிடத்தில் இருப்பார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் படுமோசமாக இருந்தது. 2018ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் சரியில்லை என்பதால் தான் டெஸ்ட் தொடரில் ரிதிமான் சஹா முதன்மை விக்கெட் கீப்பராக எடுக்கப்படுகிறார்.

ஆனால் ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவர் பேட்டிங் சரியில்லை என்பதால், 2வது டெஸ்ட்டில் அவர் நீக்கப்பட்டு, ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விக்கெட் கீப்பிங்கிற்கு முன்னுரிமை கொடுத்து நல்ல விக்கெட் கீப்பரைத்தான் எடுக்க வேண்டும். எனவே அந்தவகையில், இந்திய அணியில் ரிதிமான் சஹா தான் விக்கெட் கீப்பராக எடுக்கப்பட வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆனாலும் ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பராக எடுக்கப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான புதிதிலேயே, ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் டெக்னிக் மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதன்பின்னர் 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டபோதிலும், இன்னும் அவரது விக்கெட் கீப்பிங் மேம்படவில்லை. ஆஸி.,க்கு எதிராக சிட்னியில் நடந்துவரும் 3வது டெஸ்ட்டில், ஆஸி., இளம் வீரர் வில் புகோவ்ஸ்கியின் கேட்ச்சை 2 முறை தவறவிட்டார் ரிஷப் பண்ட். அதைப்பயன்படுத்தி அரைசதம் அடித்தார் அவர். நல்ல வேளையாக 62 ரன்களுக்கு புகோவ்ஸ்கி ஆட்டமிழந்துவிட்டார்.

ஒருவேளை அவர் அவுட்டாகாமல் பெரிய இன்னிங்ஸ் ஆடியிருந்தால் இந்திய அணிக்கு அது பெரும் பாதிப்பாக அமைந்திருக்கும். நல்லவேளையாக அது நடக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு கேட்ச் வாய்ப்பும் மிக முக்கியம். ஆனால் ரிஷப் பண்ட்டோ ஒரே வீரருக்கு 2 கேட்ச்சை தவறவிட்டார் ரிஷப் பண்ட்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானதிலிருந்து அதிகமான கேட்ச்சை கோட்டைவிட்ட விக்கெட் கீப்பர் அவர் தான். சர்வதேச அளவில் வேறு எந்த விக்கெட் கீப்பரும் அவரளவிற்கு கேட்ச்களை விட்டிருக்க மாட்டார்கள். அவரது விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விளங்க நிறைய உழைக்க வேண்டும் என்று பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார்.
 

click me!