ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றதற்கு இதுதான் காரணம்!! ரிக்கி பாண்டிங் அதிரடி

By karthikeyan VFirst Published Mar 18, 2019, 10:23 AM IST
Highlights

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என இந்திய அணி இழந்தது. இதையடுத்து நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று 2-0 என முன்னிலை வகித்த இந்திய அணி, அடுத்த 3 போட்டிகளிலும் தோற்று 3-2 என தொடரை இழந்தது. 

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என இந்திய அணி இழந்தது. இதையடுத்து நடந்த 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று 2-0 என முன்னிலை வகித்த இந்திய அணி, அடுத்த 3 போட்டிகளிலும் தோற்று 3-2 என தொடரை இழந்தது. 

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் இது என்பதால், உலக கோப்பை அணியில் பரிசீலனையில் இருக்கும் சில வீரர்களை பரிசோதிக்க இதுதான் கடைசி வாய்ப்பு. அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட், ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 

உலக கோப்பையில் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக யாரை அழைத்து செல்வது என்பது உறுதியாகவில்லை. ஆனால் அணி நிர்வாகம், சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடரில் கடைசி 2 போட்டிகளில் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருந்தார். ரிஷப் பண்ட்டை பரிசோதிப்பதற்காக தோனிக்கு ஓய்வளிக்கப்பட்டது. 

ஆனால் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பினார். பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை. தனக்கு கிடைத்த வாய்ப்பை இரண்டு கைகளால் இறுக பற்றிக்கொள்ள தவறிவிட்டார் என்றே கூற வேண்டும். இந்திய அணி அந்த தொடரை 3-2 என இழந்தது. மூன்றரை ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி. அதுவும் உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரை இழந்தது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தொடரை இழந்ததற்கான காரணத்தை ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், விராட் கோலியின் கேப்டன்சியில் பெரிய குறைகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. தோனி இல்லாத டெஸ்ட் அணியை அவர் சிறப்பாகத்தான் வழிநடத்தி செல்கிறார். அதேநேரத்தில் அணியில் தோனியின் இருப்பு இந்திய அணிக்கு ரொம்ப முக்கியம். அவரது பொறுமை, நிதானம், இக்கட்டான சூழலில் நெருக்கடியை கையாண்டு பேட்டிங் ஆடும் விதம் ஆகியவை இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். தோனியின் பேட்டிங்கை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 போட்டிகளில் மிகவும் மிஸ் செய்தேன். தோனி அணியில் இல்லாததே ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தொடரை இழந்ததற்கு காரணம் என்று பாண்டிங் அதிரடியாக தெரிவித்தார். 
 

click me!