இந்தியா - ஆஸ்திரேலியா.. எந்த அணியின் பவுலிங் யூனிட் வலுவானது..? லெஜண்ட் ரிக்கி பாண்டிங் என்ன சொல்றாருனு பாருங்க

By karthikeyan VFirst Published Dec 3, 2019, 3:05 PM IST
Highlights

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் மட்டுமல்லாது உலகம் முழுதும் வெற்றிகளை குவித்துவருகிறது. அதற்கு முக்கியமான காரணம் இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் தான். 
 

எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே திகழ்ந்த இந்திய அணி, தற்போது மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டாகவும் திகழ்கிறது. பும்ராவின் வருகைக்கு பிறகு இந்திய அணியின் பவுலிங் தரம் வேற லெவலுக்கு சென்றுவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் தலைசிறந்து விளங்குகிறது. 

பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பும்ரா ஆடவில்லை. ஆனாலும் கூட ஷமி-இஷாந்த்-உமேஷ் கூட்டணி அபாரமாக வீசியது. 

வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் முதன்முறையாக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் ஆடப்பட்டது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 106 ரன்களில் சுருட்டிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு சுருட்டி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையுமே ஃபாஸ்ட் பவுலர்கள்தான் வீழ்த்தினர். ஸ்பின் பவுலர்களுக்கு ஒரு விக்கெட் கூட விழவில்லை. 

உலகின் பல்வேறு முன்னாள் ஜாம்பவான்களும் சமகால சிறந்த வீரர்களும் இந்திய அணியின் தற்போதைய பவுலிங் யூனிட் தான் சிறந்தது என பாராட்டிவருகின்றனர். ஃபாஸ்ட் பவுலிங் தலைசிறந்து விளங்கும் நிலையில், அஷ்வின் மற்றும் ஜடேஜா எப்போதுமே அசத்தக்கூடியவர்கள். குறிப்பாக இந்திய மண்ணில் மிரட்டிவிடுவார்கள். ஆனால் வெளிநாடுகளில் அந்தளவிற்கு சோபிப்பதில்லை. 

தற்போதைய இந்திய அணியின் பவுலிங் யூனிட் தான் சிறந்தது என அனைவராலும் பாராட்டப்படும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் யூனிட் தான் சிறந்தது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக உள்ளது. பும்ரா, ஷமி ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அபாரமாக வீசிவருகின்றனர். உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோரும் அசத்துகின்றனர். இந்திய அணி மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை பெற்றுள்ளது. அஷ்வின், ஜடேஜா ஆகியோரின் ஸ்பின்னும் அசத்தலாக உள்ளது. 


 
ஆனால் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியாவில் திணறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் இந்திய ஸ்பின்னர்களை விட நாதன் லயன் தான் நல்ல ரெக்கார்டை வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மிட்செல் ஸ்டார்க்கின் வேரியேஷன் என்னை மிகவும் கவர்ந்தது. ஸ்டார்க் அபாரமாக வீசிவருகிறார். எனவே ஆஸ்திரேலிய அணியின் பவுலிங் இந்திய அணியின் பவுலிங்கை விட சிறந்து விளங்குகிறது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

click me!