RCB vs CSK: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 04, 2022, 02:30 PM IST
RCB vs CSK: சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று புனேவில் நடக்கும் போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

ஆர்சிபி அணி கடைசியாக ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது ஆர்சிபி அணி.

ஆனால் சிஎஸ்கே அணி தோனி கேப்டன்சியில் கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பதால், அதே உத்வேகத்துடன் இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி களமிறங்குகிறது.

இந்த போட்டிக்கான ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆர்சிபி அணி களமிறங்கும்.

உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, மஹிபால் லோம்ரார், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம். பிராவோ - சாண்ட்னெர் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வைன் பிராவோ/மிட்செல் சாண்ட்னெர், மஹீஷ் தீக்‌ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?