ஆர்சிபி அணியின் அதிரடி முடிவு.. கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படிடா ஓடும்..?

By karthikeyan VFirst Published Feb 13, 2020, 10:35 AM IST
Highlights

ஐபிஎல் டைட்டிலை முதல் முறையாக வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணி, ஐபிஎல் 13வது சீசனுக்கு முன்பாக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 13வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. 

ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் தான் கோலோச்சுகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 3 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. கேகே ஆர் அணி இரண்டு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறையும், ஹைதராபாத் அணி(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ்) இரண்டு முறையும் ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ளன. 

ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத மூன்று அணிகள் ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ். இதில் ஆர்சிபி அணியின் நிலைதான் ரொம்ப பரிதாபம். ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் தங்கள் அணிகளுக்கு கோப்பைகளை குவித்து கொடுக்க, ஆனால் விராட் கோலியால் ஆர்சிபி அணிக்கு ஒருமுறை கூட கோப்பையை ஜெயித்து கொடுக்க முடியவில்லை. 

விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இருபெரும் தலைசிறந்த வீரர்கள் அணியில் இருந்தும் கூட, அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளை போல கோர் டீமை பலப்படுத்தாததுதான் ஆர்சிபி அணியின் தோல்விக்கு காரணம். 

ரோஹித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பும்ரா, மலிங்கா என மும்பை இந்தியன்ஸ் அணியின் கோர் டீம் வலுவாக உள்ளது. அதேபோல, தோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ என சிஎஸ்கேவின் கோட் டீமும் வலுவாகவுள்ளது. இதுமாதிரி கோர் டீமை ஆர்சிபி வலுத்தப்படுத்தவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறது. அதனால் கோர் டீம் வலுவாக இல்லை. அதுமட்டுமல்லாமல் ஒருசில போட்டிகளில் சரியாக ஆடாத வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகள் அளிப்பதில்லை. ஒரு போட்டியில் ஆடவைப்பது, அடுத்த போட்டியில் கழட்டிவிடுவது என்றிருப்பதால், வீரரின் ரிதம் பாதிக்கப்படுகிறது. அதனால், அவர்கள் களமிறக்கப்படும் போட்டிகளில் அவர்களால் சரியாக ஆட முடிவதில்லை. 

ஆர்சிபி அணி, கோலி, டிவில்லியர்ஸ் என்ற தலைசிறந்த 2 வீரர்களை பெற்றிருந்தும் கூட, அந்த அணி ஒருமுறை கோப்பையை வெல்லாததற்கு, அந்த அணியின் தவறான திட்டமிடலும் அணுகுமுறைகளும் தான் காரணம். 

ஐபிஎல் 13வது சீசன் தொடங்கவுள்ள நிலையில், ஆர்சிபி அணி, டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள பக்கங்களில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்ற பெயரை வெறும் ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றியிருப்பதோடு, பழைய ப்ரொஃபைல் படம் மற்றும் கவர் படம் ஆகியவற்றையும் நீக்கிவிட்டு மாற்றியுள்ளது. 

Also Read - கடைசி பந்தில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி.. பரபரப்பான டி20 போட்டியில் பட்டைய கிளப்பிய இங்கிடி

எனவே ஆர்சிபி அணி அடுத்த சீசனுக்கு முன், அணியின் பெயரையும் லோகோவையும் மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால்தான் பழைய பெயரையும் லோகோவையும் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐபிஎல் டைட்டிலை ஒருமுறை கூட வெல்லாத டெல்லி அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை டெல்லி கேபிடள்ஸ் என்று மாற்றியது குறிப்பிடத்தக்கது. ”கண்ணாடிய திருப்புனா ஆட்டோ எப்படிடா ஓடும்?”

ஐபிஎல் 13வது சீசனுக்கான ஆர்சிபி அணி:

தக்கவைத்த வீரர்கள்:

விராட் கோலி(கேப்டன்), மொயின் அலி, சாஹல், டிவில்லியர்ஸ், பார்த்திவ் படேல், முகமது சிராஜ், பவன் நேகி, உமேஷ் யாதவ், குர்கீரத் சிங் மன், தேவ்தத் படிக்கல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி.

ஏலத்தில் எடுத்த வீரர்கள்:

ஆரோன் ஃபின்ச், கிறிஸ் மோரிஸ், ஜோஷ் ஃபிலிப், கேன் ரிச்சர்ட்ஸன், பவன் தேஷ்பாண்டே, டேல் ஸ்டெய்ன், ஷாபாஸ் அகமது, இசுரு உடானா. 

click me!