RCB vs CSK:ஃபாஃப், லோம்ரார், தினேஷ் கார்த்திக் அதிரடி பேட்டிங்! சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி

Published : May 04, 2022, 09:20 PM IST
RCB vs CSK:ஃபாஃப், லோம்ரார், தினேஷ் கார்த்திக் அதிரடி பேட்டிங்! சிஎஸ்கேவிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி

சுருக்கம்

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 173 ரன்களை குவித்து, 174 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று புனேவில் நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. மிட்செல் சாண்ட்னெர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மொயின் அலி சேர்க்கப்பட்டார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், மஹீஷ் தீக்‌ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி.

ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, மஹிபால் லோம்ரார், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஃபாஃப் டுப்ளெசிஸும் விராட் கோலியும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்கள். அதிரடியாக ஆடி டுப்ளெசிஸ் 22 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். சற்று மந்தமாக ஆடிய கோலி 33 பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் வெறும் 3 ரன்னில் ரன் அவுட்டானார்.

மிடில் ஓவர்களில் லோம்ரார் அதிரடியாக பேட்டிங் ஆடி 27 பந்தில் 42 ரன்கள் அடித்தார். ரஜாத் பட்டிதார் 21 ரன்கள் அடித்தார். டெத் ஓவர்களில் வழக்கம்போலவே அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக்,கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசினார்.17 பந்தில் தினேஷ் கார்த்திக் 26 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 173 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 174 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026 Longest Six: சூர்யவன்ஷி சிக்ஸர் மழை பொழிந்தாலும் முதலிடத்தில் இல்லை! டாப் 5 சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள்!
Vaibhav Suryavanshi: '700 ரன்கள் அடிப்பேன்னு முன்னாடியே எழுதி வச்சிருந்தேன்'.. ரகசியத்தை உடைத்த வைபவ் சூர்யவன்ஷி!