
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று புனேவில் நடக்கும் போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. ஆர்சிபி அணி கடைசியாக ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்கியுள்ளது ஆர்சிபி அணி.
ஆனால் சிஎஸ்கே அணி தோனி கேப்டன்சியில் கடந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பதால், அதே உத்வேகத்துடன் இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது.
புனேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. மிட்செல் சாண்ட்னெர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், மஹீஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சௌத்ரி.
ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆர்சிபி அணி களமிறங்கியுள்ளது.
ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), ரஜாத் பட்டிதார், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, மஹிபால் லோம்ரார், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.