IPL 2021 #RCBvsKKR எலிமினேட்டர் போட்டியில் மோதும் ஆர்சிபி - கேகேஆர் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Oct 10, 2021, 10:22 PM IST
IPL 2021 #RCBvsKKR எலிமினேட்டர் போட்டியில் மோதும் ஆர்சிபி - கேகேஆர் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஐபிஎல் 14வது சீசனின் எலிமினேட்டர் போட்டியில் மோதும் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் சிஎஸ்கேவும் ஆடிவருகின்றன. நாளை(அக்டோபர் 11) நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபியும் கேகேஆரும் மோதுகின்றன.

ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி, 2வது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும்; தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். 

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், கேஎஸ் பரத்(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷபாஸ் அகமது, ஹர்ஷல் படேல், ஜார்ஜ் கார்டன், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

கேகேஆர் அணியில் கடந்த போட்டியில் ஆடிய ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் இந்த போட்டியில் ஆடவில்லை. எனவே ஆண்ட்ரே ரசல் முழு ஃபிட்னெஸை அடைந்துவிடும் பட்சத்தில், இந்த போட்டியில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் மாவி.
 

PREV
click me!

Recommended Stories

பவுலர்களை துவம்சம் செய்த RO-KO கூட்டணி.. விஜய் ஹசாரே டிராபியில் சதம் விளாசி ரோகித்-விராட் அசத்தல்!
33 பந்துகளில் சதம் விளாசிய இஷான் கிஷன்.. சிக்சர் மழை.. ஒரே ஒரு பந்தில் மிஸ்ஸான வரலாற்று சாதனை!