IPL 2021 #RCBvsCSK இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்..! சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்..?

Published : Sep 24, 2021, 02:34 PM IST
IPL 2021 #RCBvsCSK இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்..! சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்..?

சுருக்கம்

ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபியும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. சிறிய மைதானமான ஷார்ஜாவில் இந்த போட்டி நடப்பதால், பவர் ஹிட்டர்களை பெற்ற இரு அணிகள் அங்கு மோதுவதால், வாணவேடிக்கையை எதிர்பார்க்கலாம். கண்டிப்பாக பெரிய ஸ்கோரை கொண்ட போட்டியாகத்தான் இது இருக்கும்.

புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கேவும், 3ம் இடத்தில் இருக்கும் ஆர்சிபியும் மோதும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

சிஎஸ்கே அணியில் சாம் கரனை எடுப்பதென்றால் எடுக்கலாம். அவர் அணியில் தேர்வாவதற்கு தயாராகிவிட்டார். ஆனால் அவரை சேர்ப்பதென்றால், பிராவோவை நீக்கவேண்டும். அனுபவ வீரரான பிராவோ, டெத் ஓவர்களை அருமையாக சாதுர்யமாக வீசக்கூடியவர். அதனால் பிராவோவை தோனி நீக்க வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் உறுதியாக கூறமுடியாது. எனவே பிராவோ/சாம் கரன் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார். மற்றபடி, கடந்த போட்டியில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் சிஎஸ்கே களமிறங்கும்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, பிராவோ/சாம் கரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.

ஆர்சிபி அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும். ஒருவேளை ஒரு மாற்றம் செய்வதாக இருந்தால், வனிந்து ஹசரங்காவிற்கு பதிலாக டிம் டேவிட் இறக்கப்படலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகக்குறைவே.

உத்தேச ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், கேஎஸ் பரத்(விக்கெட் கீப்பர்), மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், வனிந்து ஹசரங்கா, கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி.
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!