#ICCWTC 10 நாள் இருக்குல பார்த்துக்கலாம்.. செம கான்ஃபிடண்ட்டா பேசும் அஷ்வின்

By karthikeyan VFirst Published May 29, 2021, 6:23 PM IST
Highlights

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் குறித்து இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.
 

ஐசிசி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்திவரும் நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், வரும் ஜூன் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த இறுதி போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இரு அணிகளுமே இறுதி போட்டியில் வென்று முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன், நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகள் ஆடுவது நியூசிலாந்துக்கு கூடுதல் பலமாக அமையும். அதுமட்டுமல்லாது, இங்கிலாந்து கண்டிஷன் இந்திய அணியைவிட நியூசிலாந்துக்கு கூடுதல் சாதகமாக அமையும் என்றும் பல மைக்கேல் வான், பாட் கம்மின்ஸ் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

வரும் ஜூன் 3ம் தேதி இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணிக்கு குவாரண்டின் போக, பயிற்சி மேற்கொள்ள 10 நாட்களாவது பயிற்சிக்கு கிடைக்கும். அதுவே போதும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் அஷ்வின்.

இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டியளித்த அஷ்வின், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் குறித்து பேசும்போது, இந்திய அணி எந்த கண்டிஷனுக்கு ஏற்றவாறும் உடனடியாக தகவமைத்துக்கொள்ளும். ஆஸ்திரேலியாவில் நாங்கள் ஆடியதை நாங்கள் ஆஸ்திரேலியாவில் ஆடியதை போல, உடனடியாக சூழலை ஏற்றுக்கொண்டு ஆடுவோம். 

எங்களுக்கு பயிற்சி மேற்கொள்ள 10 நாட்களாவது கிடைக்கும். நிறைய வீரர்கள் ஐபிஎல்லுக்கு பின் ஆடவேயில்லை. அதுதான் பெரிய சவாலாக இருக்கும் என நினைக்கிறேன் என்று அஷ்வின் கூறியுள்ளார்.
 

click me!