நமீபியாவுக்கு எதிராக இணைந்து கலக்கிய அஷ்வின் - ஜடேஜா ஜோடி..! இந்தியாவிற்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Nov 8, 2021, 9:15 PM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணி 20 ஓவரில் 132 ரன்கள் அடித்து 133 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளும் முன்னேறிவிட்ட நிலையில், எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாத இன்றைய கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியாவும் நமீபியாவும் மோதின.

அனுபவமில்லாத அசோஸியேட் அணியான நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்பது அறிந்ததுதான். இந்திய அணி எப்படி ஜெயிக்கிறது என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

துபாயில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்திய அணி:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா.

இதையும் படிங்க - இதுதான் என்னோட ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன்..! கிங் கோலிக்கு இடம் இல்ல.. ஹர்பஜன் சிங் அதிரடி

நமீபியா அணி:

ஸ்டீஃபன் பார்டு, மைக்கேல் வான் லிங்கன், க்ரைக் வில்லியம்ஸ், கெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), ஜேன் க்ரீன் (விக்கெட் கீப்பர்), டேவிட் வீஸ், ஜேன் ஃப்ரைலிங்க், ஜேஜே ஸ்மிட், ஜான் நிகோல் லாஃப்டி ஈட்டான், ருபென் ட்ரம்பெல்மேன், பெர்னார்டு ஸ்கால்ட்ஸ்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணியில் எந்த வீரருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. தொடக்க வீரர்கள் லிங்கன் 14 ரன்னிலும், பார்ட் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பார்டை வீழ்த்திய ஜடேஜா, க்ரைக் வில்லியம்ஸையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார். அதன்பின்னர் கேப்டன் எராஸ்மஸ் (12) மற்றும் லாஃப்டி-ஈட்டான் (5) ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்தினார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்வினும் ஜடேஜாவும் இணைந்து களத்தில் கலக்கினர். 

அதன்பின்னர் ஜேஜே ஸ்மிட்டை (9) ஜடேஜாவும், ஜேன் க்ரீனை (0) அஷ்வினும் வீழ்த்தினர். ஷமி வீசிய கடைசி ஓவரில் ட்ரம்பல்மேன் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து முடிக்க, 20 ஓவரில் 132 ரன்கள் அடித்த நமீபியா அணி, 133 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 

click me!