ஹெட் கோச்சுக்கான போட்டியில் அவருகிட்ட சாஸ்திரி கிட்டத்தட்ட தோத்துட்டாரு.. அந்த ஒரு விஷயம்தான் சாஸ்திரிய காப்பாத்துச்சு

By karthikeyan VFirst Published Aug 24, 2019, 4:50 PM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அண்மையில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அண்மையில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலை, கபில் தேவ், கெய்க்வாட் மற்றும் சாந்தா ஆகிய மூவர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு நடத்தியது. ரவி சாஸ்திரி, மைக் ஹெசன், டாம் மூடி, ராபின் சிங், ராஜ்பூட் ஆகிய ஐவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. 

அதில், முழுக்க முழுக்க நேர்காணலின் அடிப்படையில், ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக கபில் தேவ் அறிவித்தார். சாஸ்திரிக்கும் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாகவும் கபில் தேவ் தெரிவித்தார். ஆனால் கம்யூனிகேஷன் திறனில் சாஸ்திரி மேம்பட்டிருந்ததால், அதுதான் அவரது தேர்விற்கு முக்கிய காரணம் என சாஸ்திரி தெரிவித்தார். 

இந்நிலையில், கிட்டத்தட்ட மைக் ஹெசனிடம் ரவி சாஸ்திரி தோற்றுவிட்டதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்த அதிகாரி, சாஸ்திரிக்கு இந்த இண்டர்வியூ எளிதாக இருந்துவிடவில்லை. மைக் ஹெசன் அவருக்கு செம டஃப் கொடுத்தார். மைக் ஹெசனின் பயிற்சியில் நியூசிலாந்து அணி முதன்முறையாக 2015 உலக கோப்பையில் அரையிறுதிக்கு சென்றது. அவரது பயிற்சியில் உருவான அணிதான் 2019 உலக கோப்பையிலும் இறுதி போட்டி வரை சென்றது. 

பயிற்சியாளராக இருவரின் சாதனைகளிலும் பெரிய வித்தியாசமில்லாததால் போட்டி கடுமையாக இருந்தது. ஆனால் சர்வதேச போட்டியில் அதிகமாக அனுபவத்தில் ஹெசனை சாஸ்திரி ஓவர்டேக் செய்தார். மைக் ஹெசன் அதிகமாக சர்வதேச போட்டிகளில் ஆடியதில்லை. ஆனால் சாஸ்திரி 80 டெஸ்ட் போட்டிகளிலும் 150 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். அதுதான் அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம். ஆனால் போட்டி கடுமையாகவே இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!