ஹர்திக் பாண்டியா விஷயத்துல கவனமா இருங்க.. அந்த தவறை மட்டும் செஞ்சுராதீங்க! இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்

Published : Jun 04, 2022, 10:08 PM IST
ஹர்திக் பாண்டியா விஷயத்துல கவனமா இருங்க.. அந்த தவறை மட்டும் செஞ்சுராதீங்க! இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்

சுருக்கம்

டி20 உலக கோப்பை நெருங்குவதால் ஹர்திக் பாண்டியாவை ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடவைத்து ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று முன்னாள் இந்திய வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அறிவுறுத்தியுள்ளார்.  

காயத்தால் கடந்த  2 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, நீண்ட ஓய்வு மற்றும் பயிற்சி காரணமாக முழு ஃபிட்னெஸை அடைந்து ஐபிஎல்லில் ஒரு முழுமையான ஆல்ரவுண்டராக அசத்தினார்.

ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்திலும் அபாரமாக செயல்பட்டு அறிமுக சீசனிலேயே குஜராத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்.

ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக 4ம் வரிசையில் இறங்கி கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடிய பாண்டியா, தன்னால் மிடில் ஓவர்களிலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நிரூபித்தார். 15 போட்டிகளில் 487 ரன்களை குவித்தார்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அவரது கெரியரின் ஆரம்பத்தில் அசத்தியதை போல, இப்போது ஆல்ரவுண்டராக மீண்டும் அசத்துகிறார்.

எனவே இந்த ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு ஹர்திக் பாண்டியா மிக முக்கியமான வீரர். எனவே அவரை பாதுகாப்பாக  பார்த்துக்கொள்ள வேண்டும். பேட்ஸ்மேனாகவோ அல்லது ஆல்ரவுண்டராகவோ, ஆகமொத்தத்தில் எப்படியோ என்னை பொறுத்தமட்டில் ஹர்திக் பாண்டியா அணியில் இருக்கவேண்டும். டி20 உலக கோப்பை நெருங்குவதால், அவருக்கு போதுமான ஓய்வை கொடுத்து தயார்படுத்த வேண்டும். அவரை ஒருநாள் போட்டிகளில் ஆடவைத்து ரிஸ்க் எடுக்கக்கூடாது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!