மண்ணின் மைந்தன் தோனிக்கு அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாக வரவேற்பளித்த சொந்த ஊர் ரசிகர்கள்!! வீடியோ

By karthikeyan VFirst Published Mar 9, 2019, 10:11 AM IST
Highlights

சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று ஆடிய போட்டிதான் அவரது கடைசி போட்டியாக இருக்கும். அந்த வகையில், ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியனுக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, இந்த உலக கோப்பையுடன் ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2004ம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடிவரும் தோனி, 2007ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். 2007ல் டி20 உலக கோப்பை, 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வகையான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்த பெருமைமிக்க தோனி, கேப்டன்சியிலிருந்து விலகி அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார். 

தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும் கேப்டன் கோலி, தோனியின் ஆலோசனையை பெற்றே செயல்படுகிறார். இக்கட்டான சூழல்களில் முடிவுகளை எடுக்கும் கெத்தாக வீரராக அணியில் இருக்கிறார். இந்த உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

எனவே அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று ஆடிய போட்டிதான் அவரது கடைசி போட்டியாக இருக்கும். அந்த வகையில், ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியனுக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியபோது மேக்ஸ்வெல்லை வழக்கம்போல தனது சமயோசித புத்தியால் அபாரமாக ரன் அவுட் செய்தார் தோனி. 

பின்னர் 314 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிய போது 3 விக்கெட்டுகளுக்கு பிறகு களத்திற்கு வந்தார் தோனி. தோனி பெவிலியனில் இருந்து மைதானத்திற்கு வரும்போது ராஞ்சி ரசிகர்கள், மண்ணின் மைந்தன் தோனிக்கு அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாக வரவேற்பளித்தனர். அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 

When the 'Lion' walks out to bat in his den 🦁🦁 pic.twitter.com/WKRKGpKgaB

— BCCI (@BCCI)

கோலியுடன் சேர்ந்து சிறப்பாக ஆடிய தோனி, 26 ரன்கள் எடுத்து ஸாம்பாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 281 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானதால் 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 
 

click me!