விராட் கோலியின் போராட்ட சதம் வீண்.. ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Mar 8, 2019, 9:30 PM IST
Highlights

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
 

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, தொடக்க ஜோடி அமைத்து கொடுத்த சிறப்பான அடித்தளத்தால் 313 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் அபாரமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 193 ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். ஒரு வழியாக ஃபின்ச்சை 93 ரன்களில் வீழ்த்தி தொடக்க ஜோடியை பிரித்தார் குல்தீப் யாதவ். 93 ரன்களில் ஆட்டமிழந்த ஃபின்ச், சதத்தை தவறவிட்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆனால் சதத்திற்கு பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 104 ரன்களில் ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.

கவாஜா ஆட்டமிழந்தாலும் மூன்றாம் வரிசையில் இறங்கிய மேக்ஸ்வெல், அடித்து ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 31 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் அடித்த மேக்ஸ்வெல், ஜடேஜாவின் அபாரமான ஃபீல்டிங் மற்றும் தோனியின் சமயோசித விக்கெட் கீப்பிங்கால் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு 44வது ஓவரை தனது கடைசி ஓவராக வீசிய குல்தீப், அந்த ஓவரில் ஷான் மார்ஷ் மற்றும் ஹேண்ட்ஸ்கம்ப் ஆகிய இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் குல்தீப். 33-34 ஓவரிலேயே 200 ரன்களை எட்டிவிட்ட ஆஸ்திரேலிய அணியை, மேக்ஸ்வெல்லின் விக்கெட்டுக்கு பிறகு கட்டுப்படுத்தினர் இந்திய பவுலர்கள். 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 313 ரன்களை குவித்தது.

314 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். தவான் ஒரு ரன்னிலும் ரோஹித் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த போட்டியிலும் ஆரம்பத்திலேயே களத்திற்கு வரும் வாய்ப்பு ராயுடுவிற்கு கிடைத்தது. ஆனால் இந்த போட்டியிலும் வாய்ப்பை நழுவவிட்டார் ராயுடு. களத்திற்கு வந்தது முதலே திணறிய ராயுடு, கம்மின்ஸின் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

கோலியுடன் ஜோடி சேர்ந்து தோனி சிறப்பாக ஆடினார். எனினும் இந்த ஜோடியை நிலைத்து நிற்க ஸாம்பா அனுமதிக்கவில்லை. தோனியை போல்டாக்கினார் ஸாம்பா. இதையடுத்து கோலியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்து நன்றாக ஆடினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு கோலியும் கேதரும் இணைந்து 88 ரன்களை குவித்தனர். கேதர் ஜாதவ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கோலி, இந்த போட்டியிலும் சதமடித்தார். சர்வதேச ஒருநாள் போட்டியில் 41வது சதத்தை பூர்த்தி செய்தார். கோலியும் விஜய் சங்கரும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் ஆடியபோது, இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றது. கோலி 123 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் ஸ்கோர் 219 ஆக இருந்தபோது கோலி ஆட்டமிழந்தார். 37.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கோலியின் விக்கெட்டை இந்திய அணி இழந்தது. அதன்பிறகு களத்திற்கு வந்த ஜடேஜா, சிங்கிள் கூட ரொடேட் செய்ய முடியாமல் திணறியதை அடுத்து, நெருக்கடி அதிகமானது. அதனால் மறுமுனையில் நின்ற விஜய் சங்கர், அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அடித்து ஆடினார். நன்றாக ஆடிய விஜய் சங்கர், ஸாம்பாவின் பந்தில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

விஜய் சங்கர் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு இந்திய அணி டெயிலெண்டர்களின் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானதை அடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

click me!