#CSKvsRR ஜடேஜாவுக்கு இன்னைக்கு இருக்கு கச்சேரி..! உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

By karthikeyan VFirst Published Apr 19, 2021, 2:31 PM IST
Highlights

சிஎஸ்கே அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இரு அணிகளுமே இந்த சீசனின் முதல் போட்டியில் தோற்று, 2வது போட்டியில் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்த அணிகள். எனவே அந்த வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலேயே இரு அணிகளும் களமிறங்குகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். வின்னிங் காம்பினேஷனை மாற்றாது என்பதுடன், மாற்றுவதற்கு எவ்வித அவசியமும் இல்லை.

கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டேவிட் மில்லரும் கிறிஸ் மோரிஸும் சிறப்பாக ஆடினர். பென் ஸ்டோக்ஸ் காயத்தால் வெளியேறியதையடுத்து மில்லர் ஆடும் லெவனில் வாய்ப்பு பெற்றார். இல்லையெனில் கடந்த சீசன்களை போலவே மில்லர் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் பென்ச்சிலேயே உட்கார்ந்திருப்பார். 

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து, ராஜஸ்தான் வெற்றிக்கு உதவிய மில்லர், சிஎஸ்கே வீரரான ஜடேஜாவின் பவுலிங்கை கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக ஆடியிருக்கிறார். ஜடேஜாவின் பவுலிங்கில் 49 பந்தை எதிர்கொண்டு 85 ரன்களை விளாசியுள்ளார். இடது கை ஸ்பின்னரான ஜடேஜாவின் பவுலிங்கை இடது கை பேட்ஸ்மேனான மில்லர் அடி நொறுக்கி எடுத்திருக்கிறார். எனவே இன்றைய போட்டியில் மில்லரை மீறி மிடில் ஓவர்களில் ஜடேஜா ரன்னை கட்டுப்படுத்தி வீசுவது அவருக்கு சவாலாகவே இருக்கும்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

மனன் வோரா, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஷிவம் துபே, கிறிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனாத்கத், சேத்தன் சகாரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

click me!