இலக்கு என்னவா இருந்தால் என்னங்க! பவர்ப்ளேயில் பட்டைய கிளப்பிய பிரித்வி ஷா-தவான் ஜோடி! பிரேக் கொடுத்த அர்ஷ்தீப்

By karthikeyan VFirst Published Apr 18, 2021, 10:03 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 196 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிவரும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா - தவான்  பவர்ப்ளேயில் அபாரமாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
 

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடேவில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், பஞ்சாப் கிங்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

கேஎல் ராகுலும் மயன்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக இறங்கினர். இருவருமே தொடக்கம் முதலே அடித்து ஆடினர். குறிப்பாக மயன்க் அகர்வால் ஆரம்பம் முதலே பெரிய ஷாட்டுகளை அடித்து ஆட, ராகுல் சில பந்துகளை மட்டும் தேர்வு செய்து அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த மயன்க் அகர்வால், 36 பந்தில் 69 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

முதல் விக்கெட்டுக்கு ராகுலும் மயன்க்கும் இணைந்து 12.4 ஓவரில் 122 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய ராகுலும் அரைசதம் அடித்தார். 51 பந்தில் 61 ரன்கள் அடித்த ராகுல் 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். கெய்லும் பெரிய ஷாட்டுகள் ஆடமுடியாமல் தடுமாறியதால், மயன்க் அகர்வால் ஆட்டமிழந்த பின்னரே ரன்வேகம் குறைந்தது. ராகுலும் ஆட்டமிழந்த பின்னர், கெய்ல், பூரன் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தீபக் ஹூடா 13 பந்தில் 22 ரன்கள் அடிக்க, கடைசி ஓவரில் களத்திற்கு வந்த ஷாருக்கான், 5 பந்தில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 195 ரன்களை குவித்தது பஞ்சாப் அணி.

196 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்ட தொடங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் பவர்ப்ளேயில் அடித்து ஆடி ஸ்கோர் செய்தனர். 

முதல் ஓவரிலிருந்தே அடித்து ஆடிய பிரித்வி ஷாவும் தவானும் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து 10 ரன்ரேட்டை தொடர்ந்தனர். ஷமி, அர்ஷ்தீப் ஆகியோரின் பவுலிங்கை அடித்து ஆடி, முதல் விக்கெட்டுக்கு பிரித்வியும் தவானும் இணைந்து 5.3 ஓவரில் 59 ரன்களை விளாசினர்.

17 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 32 ரன்கள் அடித்த பிரித்வி ஷா, பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் அர்ஷ்தீப்பின் பந்தில் ஆட்டமிழக்க, தவானுடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்துள்ளார். பவர்ப்ளே 6 ஓவர் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் அடித்துள்ளது. தவான் 18 பந்தில் 28 ரன்களுடன் ஆடிவருகிறார்.
 

click me!