
ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த வாரம் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் சேர்ந்து ரூ.551 கோடி கொடுத்து 204 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.
மெகா ஏலத்திற்கு முன்பாக சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூவரையும் தக்கவைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஏலத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், ஷிம்ரான் ஹெட்மயர், தேவ்தத் படிக்கல், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல் ஆகிய பல சிறந்த வீரர்களை எடுத்தது.
சஞ்சு சாம்சன் தலைமையில் வலுவான அணியை கட்டமைத்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின், சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
தேவ்தத் படிக்கல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய 2 இளம் வீரர்களும் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள். 3ம் வரிசையில் சஞ்சு சாம்சன் மற்றும் 4ம் வரிசையில் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் இறங்குவார்கள். 5ம் வரிசையில் ஷிம்ரான் ஹெட்மயர் மற்றும் 6ம் வரிசையில் இளம் வீரர் ரியான் பராக் ஆகிய இருவரும் ஆடலாம்.
ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் சாஹல் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக நேதன் குல்ட்டர்நைல், பிரசித் கிருஷ்ணா மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகிய மூவரும் ஆடுவார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த ஆடும் லெவன்:
தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், நேதன் குல்ட்டர்நைல், ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா.