
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கேகேஆரும் மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், 4வது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்குகிறது. கேகேஆர் அணி 6 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே கேகேஆர் அணியும் 4வது வெற்றிக்காக ஆடுகிறது.
இன்று மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் ராஜஸ்தான் - கேகேஆர் ஆகிய 2 அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. இரு அணிகளுமே கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். ஏனெனில் இரு அணிகளின் காம்பினேஷனும் வலுவாகவே உள்ளது.
உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ராசி வாண்டெர் டசன், ஷிம்ரான் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், ரியான் பராக், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.
உத்தேச கேகேஆர் அணி:
ஆரோன் ஃபின்ச், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஷெல்டான் கோட்ரெல் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், அமான் கான், வருண் சக்கரவர்த்தி.