RR vs GT: ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம்.. டைட்டன்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 14, 2022, 02:44 PM IST
RR vs GT: ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம்.. டைட்டன்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை ஆடிய  4 போட்டிகளில் தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளன. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நெட் ரன்ரேட் அதிகமாக இருப்பதால் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திலும், குஜராத் அணி 5ம் இடத்திலும் உள்ளன.

இன்றைய போட்டியில் 4வது வெற்றியை பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன. இந்த போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்படும். ராசி வாண்டர் டசனுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் சேர்க்கப்படலாம்.

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜிம்மி நீஷம், குல்தீப் சென், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம். முதல் 4 போட்டிகளிலும் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரராக ஆடிய மேத்யூ வேட் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடாததால் அவருக்கு பதிலாக ஆஃப்கான் வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மேத்யூ வேட் விக்கெட் கீப்பர் என்பதால், அவர் நீக்கப்பட்டால்  விக்கெட் கீப்பர் தேவை. எனவே விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா அணியில் சேர்க்கப்படலாம். அவர் சேர்க்கப்படுவதால்,  அபினவ் மனோகர் அல்லது டேவிட் மில்லர் நீக்கப்படலாம்.

உத்தேச குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர்/அபினவ் மனோகர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நால்கண்டே.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!