தற்கால பவுலர்களில் அவங்க 2 பேரால் மட்டும் தான் எனக்கு டஃப் கொடுக்க முடியும்..! டிராவிட்டின் நேர்மையான தேர்வு

By karthikeyan VFirst Published Jun 1, 2020, 7:03 PM IST
Highlights

சமகால பவுலர்களில் யார் தனக்கு சவாலளிக்கப்பார்கள் என்று லெஜண்ட் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
 

ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்தியாவின் ராகுல் டிராவிட். 1996லிருந்து 2012ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடிய ராகுல் டிராவிட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மொத்தமாக 509 சர்வதேச போட்டிகளில் ஆடி, 24208 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6வது வீரராக திகழ்கிறார்.

சுயநலமாக ஒரு இன்னிங்ஸ் கூட ஆடாத வீரர் ராகுல் டிராவிட். அணியின் நலனையும் வெற்றியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆடியவர். ராகுல் டிராவிட் டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர் அல்ல ராகுல் டிராவிட். சச்சின், தோனி மாதிரியான வீரர்கள் ஓவராக தூக்கி கொண்டாடப்பட்டதால், ராகுல் டிராவிட்டின் பெரும் பொதுவெளியில் பெரிதாக பேசப்படவில்லை. 

ஸ்டிரைட் டிரைவ், கவர் டிரைவ், ஸ்வீப் ஷாட், ஃப்ளிக் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட், புல் ஷாட், கட் ஷாட், ஹூக் ஷாட் என அனைத்து விதமான ஷாட்டுகளையும் சிறப்பாக ஆடக்கூடியவர். அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடவல்லவர் என்பதால், ஃபாஸ்ட் - ஸ்பின் - மீடியம் ஃபாஸ்ட் என எந்தவிதமான பவுலிங்கும் அவரை பெரியளவில் டார்ச்சர் செய்ததில்லை.

தனது கெரியரில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மெக்ராத், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், சக்லைன் முஷ்டாக், ஆலன் டொனால்ட், பிரெட் லீ, ஷோயப் அக்தர், ஷேன் பாண்ட் என உலகின் பல தலைசிறந்த மற்றும் மிரட்டலான பவுலர்களை எல்லாம் திறம்பட எதிர்கொண்டு ஆடி, அவர்களின் பாராட்டையும் பெற்றவர் ராகுல் டிராவிட். 

அப்பேர்ப்பட்ட மிகச்சிறந்த பேட்ஸ்மேனான ராகுல் டிராவிட்டிடம், இப்போதைய பவுலர்களில் உங்களுக்கு யார் சவாலளிப்பார் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, தென்னாப்பிரிக்காவின் ரபாடா மற்றும் இந்தியாவின் புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரது பெயரையும் தெரிவித்துள்ளார். 

ரபாடா ஸ்பெஷலான பவுலர். அவர் எனக்கு சவாலளிப்பார் என நினைக்கிறேன். அதேபோல புவனேஷ்வர் குமார் சவாலளிப்பார். புது பந்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வீசக்கூடியவர். அவரது இன்ஸ்விங் அபாரமாக இருக்கும். எனவே புது பந்தில் அவரது இன்ஸ்விங்கை எதிர்கொள்வது கண்டிப்பாக கடினமாக இருக்கும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

click me!