ராகுல் டிராவிட்டா இப்படி? ரிஷப் பண்ட்டின் சதத்தை விட பரபரப்பா பேசப்படும் டிராவிட்டின் கொண்டாட்டம்!வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Jul 2, 2022, 3:30 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிராக ரிஷப் பண்ட் அடித்த சதத்தை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையே எட்ஜ்பாஸ்டனில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 98 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 விக்கெட்டுகளை 98 ரன்களுக்கே இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஷப் பண்ட் சதமும், ஜடேஜா அரைசதமும் அடித்தனர். ரிஷப்பும் ஜடேஜாவும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர்.

இதையும் படிங்க - தோனிக்கு ஒரு பைக் கொடுத்தோம்; பைக்கை கொடுத்த அடுத்த செகண்ட் தோனியை காணும்! ஸ்ரீநிவாசன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷர்துல் தாகூரும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை குவித்துள்ளது. ஜடேஜா 83 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் ஷமி களத்தில் உள்ளார். ஜடேஜா - ஷமி இருவரும் 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்கின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் ரிஷப் பண்ட் அடித்த 2வது சதம் இது. இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை அபாரமாக பேட்டிங் ஆடி காப்பாற்றினார் ரிஷப் பண்ட். புஜாரா, கோலி மாதிரியான சீனியர் வீரர்களே தடுமாறிய இங்கிலாந்து பவுலர்களை, அசால்ட்டாக அடித்து நொறுக்கின்றார் ரிஷப் பண்ட்.

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்! முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா; 3ம் இடத்தில் இந்தியா

ரிஷப் பண்ட்டின் சதம் மிக அருமையானது. மிக முக்கியமான நேரத்தில் அடிக்கப்பட்டது. அதனால் இந்த சதம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ரிஷப் பண்ட்டின் பேட்டிங்கால் வெகுவாக கவரப்பட்ட பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட்டின் சதத்தை, ஏதோ உலக கோப்பையையே வென்றதைப்போல மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார். பொதுவாக வெற்றி தோல்விக்கான ரியாக்‌ஷனை பெரிதாக காட்டாத குணநலனை கொண்ட ராகுல் டிராவிட், ரிஷப் பண்ட்டின் சதத்தை கைகளை தூக்கி உற்சாகமாக கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

Rahul Dravid Celebration 🥺🥰 pic.twitter.com/AsRPYRYAuO

— Tweeting Quarantino (@rohitadhikari92)
click me!