#AUSvsIND டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி ரெக்கார்டையே அச்சுறுத்தும் ரஹானே..!

By karthikeyan VFirst Published Jan 5, 2021, 9:08 PM IST
Highlights

ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட்டில் தோனியின் டெஸ்ட் கிரிக்கெட் ரெக்கார்டை சமன் செய்யும் வாய்ப்பு ரஹானேவுக்கு உள்ளது.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், அந்த போட்டியுடன் விராட் கோலி திரும்பிவிட்ட போதிலும், கோலி, ஷமி ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் ரஹானே தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம், ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக 100 சதவிகித வின்னிங் கேப்டனாக திகழ்கிறார். ரஹானே இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அவரது கேப்டன்சியில் ஆடிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

2017ல் தர்மசாலாவில் ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட், 2018ல் பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் இந்த தொடரில் மெல்போர்னில் நடந்த 2வது டெஸ்ட் ஆகிய 3 போட்டிகளில் ரஹானே கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தியுள்ளார். இந்த 3 போட்டிகளிலுமே இந்திய அணி தான் வென்றது.

இந்நிலையில், சிட்னியில் ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் வென்றால், இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின், முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன் என்ற தோனியின் ரெக்கார்டை சமன் செய்துவிடுவார் ரஹானே. 2008ல் அனில் கும்ப்ளேவிற்கு பிறகு, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி, அவர் வழிநடத்திய முதல் 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அந்த சாதனையை சமன் செய்து, பின்னர் தகர்க்கும் வாய்ப்பும் ரஹானேவிற்கு உள்ளது. அதை செய்கிறாரா என்று பார்ப்போம்.
 

click me!