அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பஞ்சாப் – டாஸ் வென்று பவுலிங் – மும்பை ஜெயிக்க 50 சதவிகித வாய்ப்பு!

By Rsiva kumar  |  First Published Apr 18, 2024, 7:37 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 33 ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார்.


பஞ்சாப் அணியின் ஹோம் மைதானமான முல்லன்பூரில் ஐபிஎல் 2024 தொடரின் 33ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்கிறது. இது ரோகித் சர்மாவின் 250ஆவது ஐபிஎல் போட்டியாகும்.

பஞ்சாப் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஜானி பேர்ஸ்டோவிற்கு பதிலாக ரிலீ ரோஸோவ் இடம் பெற்றுள்ளார். மேலும், அதர்வா டைடு நீக்கப்பட்டுள்ளார். அஷுதோஷ் சர்மா இடம் பெற்றுள்ளார். மும்பை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Tap to resize

Latest Videos

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, முகமது நபி, ஜெரால்டு கோட்ஸி, ஷ்ரேயாஸ் கோபால், ஜஸ்ப்ரித் பும்ரா.

பஞ்சாப் கிங்ஸ்:

ரிலீ ரோஸோவ், பிராப்சிம்ரன் சிங், சாம் கரண் (கேப்டன்), ஜித்தேச் சர்மா (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், கஜிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் விளையாடிய 6 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது. இதே போன்று பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடம் பிடித்துள்ளது.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 31 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் 15 போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் 16 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மொகாலியில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் கடைசியாக நடந்த 4 போட்டிகளில் அவே அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ஹோம் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது.

click me!