பவுலிங், பீல்டிங்கில் மாஸ் காட்டிய டெல்லி – குஜராத்தை 89 ரன்னுக்கு சோலிய முடிச்ச ரிஷப் பண்ட் அண்ட் கோ!

By Rsiva kumarFirst Published Apr 17, 2024, 9:34 PM IST
Highlights

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 32ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 32ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சகா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதில், கில் 2 பவுண்டரி அடித்த நிலையில், இஷாந்த் சர்மா ஓவரில் பிரித்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆரம்பம் முதலே திணறிய சகா 10 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து முகேஷ் குமார் பவுலிங் கிளீன் போல்டானார். தமிழக வீரர் சாய் சுதர்சன் 12 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். டேவிட் மில்லர் 2, அபினவ் மனோகர் 8, ஷாருக்கான் 0 என்று டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் வரையில் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் 8.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளது. அடுத்து வந்த 10, மோகித் சர்மா 2 என்று ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய ரஷீத் கான் மட்டும் 24 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 31 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து நூர் அகமது 1 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.

குஜராத் டைட்டன்ஸ் 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடுத்த 7.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனையை படைத்தது.

இந்த சீசனில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஒரு அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இதுவே முதல் முறையாகும். மேலும், இந்த சீசனில் ரொம்பவே குறைவான ஸ்கோர் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டெல்லிக்கு எதிராக 125/6 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஆண்டு லக்னோவிற்கு எதிராக 130 ரன்கள் எடுத்திருந்தது. இதே போன்று கடந்த ஆண்டு லக்னோவிற்கு எதிராக 135/6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இஷாந்த் சர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். கலீல் அகமது மற்றும் அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.

click me!