ஒருவருக்கு பின் ஒருவராக நடையை கட்டிய ஜிடி – 2 ஸ்டெம்பிங், ஒரு ரன் அவுட், 48 ரன்னுக்கு 6 விக்கெட் காலி!

Published : Apr 17, 2024, 09:06 PM IST
ஒருவருக்கு பின் ஒருவராக நடையை கட்டிய ஜிடி – 2 ஸ்டெம்பிங், ஒரு ரன் அவுட், 48 ரன்னுக்கு 6 விக்கெட் காலி!

சுருக்கம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 32ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 32ஆவது லீக் போட்டி தற்போது அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் டேவிட் வார்னர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சுமித் குமார் அணியில் இடம் பெற்றுள்ளார்.

இதே போன்று, குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விருத்திமான் சகா, டேவிட் மில்லர் திரும்ப வந்துள்ளனர். சந்தீப் வாரியர் இன்றைய போட்டியில் அறிமுகம் செய்யப்பட உள்ளார். மேலும், உமேஷ் யாதவ்விற்கு பதிலாக அவர் இடம் பெறுகிறார்.

சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சகா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், கில் 2 பவுண்டரி அடித்த நிலையில், இஷாந்த் சர்மா ஓவரில் பிரித்வி ஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆரம்பம் முதலே திணறிய சகா 10 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து முகேஷ் குமார் பவுலிங் கிளீன் போல்டானார்.

தமிழக வீரர் சாய் சுதர்சன் 12 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். டேவிட் மில்லர் 2, அபினவ் மனோகர் 8, ஷாருக்கான் 0 என்று டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் வரையில் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 8.4 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது ராகுல் திவேதியா மற்றும் ரஷீத் கான் இருவரும் விளையாடி வருகின்றனர்.

குஜராத் டைட்டன்ஸ் 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இஷாந்த் சர்மா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். முகேஷ் குமார் ஒரு விக்கெட் எடுத்தார். இதில், ரிஷப் பண்ட் 2 அபாரமான ஸ்டெம்பிங் செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ்:

சுப்மன் கில் (கேப்டன்), விருத்திமான் சகா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான், மோகித் சர்மா, நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்.

டெல்லி கேபிடல்ஸ்:

பிரித்வி ஷா, ஜாக் பிரேசர் மெக்கர்க், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), அக்‌ஷர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது.

 

 

இந்த சீசனில் இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் 2ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் 9ஆவது இடத்தில் உள்ளது. இதே போன்று குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 3ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.

இதுவரையில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மோதிய 3 போட்டிகளில் குஜராத் 2 போட்டிகளிலும், டெல்லி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த சீசனில் கடைசியாக நடந்த 3 போட்டிகளிலும் அவே அணியே வெற்றி பெற்றிருக்கிறது. அதன்படி இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெறுவதற்கு 50 சதவிகித வாய்ப்புகள் இருக்கிறது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!