
Punjab Kings Reached IPL 2025 Playoffs after 11 Years : ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிக்கி பாண்டிங் தலைமையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அணியின் வலுவான பேட்டிங் வரிசை இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி வித்தியாசமாக செயல்படுகிறது. பயிற்சியாளர் பாண்டிங், ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமை மற்றும் இந்திய வீரர்களின் அச்சமற்ற பேட்டிங் ஆகியவை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளன. பஞ்சாப் கிங்ஸ் விளையாடிய 14 ஐபிஎல் 2025 போட்டிகளில் 9 வெற்றி 3 தோலி மற்றும் ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் 19 புள்ளிகளுடன் ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதன் மூலமாக 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் அபாரமாக உள்ளது. ஏழு பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் 30 சராசரியுடன் 149 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் அடித்துள்ளனர். ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங்கின் தொடக்க ஜோடி, ஷ்ரேயாஸ் ஐயரின் நிலையான ஆட்டம் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் பங்களிப்பு ஆகியவை அணியின் பலம்.
ஷ்ரேயாஸ் ஐயர்: 14 லீக் போட்டிகளில் 514 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். 51.40 சராசரியுடன் 171.90 ஸ்ட்ரைக் ரேட்டில் ஐந்து அரைசதங்கள் அடித்துள்ளார்.
பிரப்சிம்ரன் சிங்: இந்த சீசனில் 14 போட்டிகளில் 499 ரன்கள் குவித்துள்ளார். 35.64 சராசரியுடன் 165.78 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அசத்தியுள்ளார்.
ப்ரியன்ஷ் ஆர்யா: 14 போட்டிகளில் 424 ரன்கள் எடுத்துள்ளார். 30.88 சராசரியுடன் 183.54 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அசத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
நேஹல் வதேரா: 12 போட்டிகளில் 298 ரன்கள் எடுத்துள்ளார். 33.11 சராசரியுடன் 152.04 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அசத்தியுள்ளார்.
சஷாங்க் சிங்: 11 போட்டிகளில் 284 ரன்கள் எடுத்துள்ளார். 56.80 சராசரியுடன் 149.47 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அசத்தியுள்ளார்.
ஜோஷ் இங்கிலிஸ்: 7 போட்டிகளில் 197 ரன்கள் எடுத்துள்ளார். 32.83 சராசரியுடன் 164.16 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அசத்தியுள்ளார்.
மார்கஸ் ஸ்டோனிஸ்: 7 போட்டிகளில் 126 ரன்கள் எடுத்துள்ளார். 31.50 சராசரியுடன் 193.85 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி அசத்தியுள்ளார்.