#PBKSvsRR புறக்கணிக்கப்படும் யுனிவர்ஸ் பாஸ்..? கெய்லுக்கு பதில் இவரா..? உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி

By karthikeyan VFirst Published Sep 21, 2021, 3:59 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 2ம் பாகத்தின் முதல் போட்டியின் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே அணியும், நேற்று நடந்த போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி கேகேஆர் அணியும் வெற்றி பெற்றன.

துபாயில் இன்று நடக்கும் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இரு அணிகளிலுமே வெளிநாட்டு வீரர்கள் பலர் வெளியாகியிருப்பதால், புதிய வீரர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

ராஜஸ்தான் அணியில் பட்லர், ஸ்டோக்ஸ்,  ஆர்ச்சர், ஆண்ட்ரூ டை ஆகியோர் விலகிய நிலையில், பஞ்சாப் அணியில் ஜெய் ரிச்சர்ட்ஸன், ரிலே மெரிடித் ஆகிய வீரர்கள் விலகினர்.

இந்த சீசனின் முதல் பாகத்தின் முடிவில் இரு அணிகளுமே தலா 6 புள்ளிகளை பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளையும் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுமே பிளே ஆஃபிற்கு முன்னேற வெற்றி அவசியம் என்ற சூழலில் இன்று மோதுகின்றன. 

எனவே இரு அணிகளுமே வெற்றி கட்டாயத்தில் இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள நிலையில், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இந்த சீசனின் முதல் பாகத்தில் ஆடியதை போன்றே, ராகுலும் மயன்க் அகர்வாலுமே தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். 3ம் வரிசையில் கெய்லுக்கு பதிலாக தென்னாப்பிரிக்காவின் மார்க்ரம்  ஆடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான மார்க்ரம் அதிரடியாக ஆடக்கூடியவர் தான். அண்மையில் கூட இலங்கைக்கு எதிரான தொடரில் அருமையாக ஆடியிருக்கிறார். பேட்டிங்குடன், ஃபீல்டிங்கையும் கருத்தில் கொண்டு கெய்லுக்கு பதிலாக மார்க்ரம் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அதன்பின்னர் 4, 5 மற்றும் 6ம் வரிசைகளில் முறையே, பூரன், தீபக் ஹூடா, ஷாருக்கான் ஆகியோர் ஆடுவார்கள்.

இங்கிலாந்து ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத் அணியில் எடுக்கப்பட்டிருப்பதால், அவர் ஆடுவார். மற்றொரு ஸ்பின்னராக உள்நாட்டு ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோயும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி, அர்ஷ்தீப் சிங்குடன், வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலரான நேதன் எல்லிஸும் ஆடுவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மயன்க் அகர்வால், மார்க்ரம், பூரன், தீபக் ஹூடா, ஷாருக்கான், அடில் ரஷீத், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், நேதன் எல்லிஸ், முகமது ஷமி.
 

click me!