2வது ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி

By karthikeyan VFirst Published Mar 5, 2019, 12:16 PM IST
Highlights

ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது. 
 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 

ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது. 

இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை. ராகுலுக்கு இந்த தொடரில் வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால் இரண்டாவது போட்டியில் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் தவான் கடந்த சில போட்டிகளில் திணறிவருகிறார். டி20 போட்டியில் சரியாக ஆடாத நிலையில், முதல் ஒருநாள் போட்டியிலும் சரியாக ஆடவில்லை. அதனால் அவர் மீண்டும் நம்பிக்கை பெற ஒரு சிறந்த இன்னிங்ஸ் ஆட வேண்டிய அவசியம் இருப்பதால், அவர் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக ஆடுவார்.

விஜய் சங்கர், ஜடேஜா ஆகியோரும் இரண்டாவது போட்டியில் கண்டிப்பாக ஆடுவார்கள். ஜடேஜா முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்காமல் கட்டுக்கோப்பாக வீசினார். விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் ரன்களை கட்டுப்படுத்தினார். விஜய் சங்கருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் பவுலிங்கும் சரியாக வீசவில்லை. ஆனால் அதற்காக அவர் நீக்கப்பட வாய்ப்பில்லை. ஆல்ரவுண்டர் என்ற வகையில் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார். 

இரண்டாவது போட்டிக்கான உத்தேச இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜடேஜா, குல்தீப், பும்ரா, ஷமி. 
 

click me!