ஒருநாள் அவகாசம் கேட்ட ஹைதராபாத் கிரிக்கெட் வாரியம் – மின் கட்டணம் செலுத்ததால் இருட்டில் மூழ்கிய மைதானம்!

By Rsiva kumarFirst Published Apr 5, 2024, 2:43 PM IST
Highlights

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மின் விநியோகம் நிறுத்தம் காரணமாக இன்றைய போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஐபிஎல் 2024 தொடரின் 18ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் தான் இந்தப் போட்டி நடைபெறுவதில் புதிதாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளாக மின் கட்டணம் செலுத்துவதில் சில கோடி பாக்கி வைத்துள்ளது.

அதில் பாதி தொகையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செலுத்தி ரூ.1.63 கோடியை பாக்கி வைத்துள்ளது. எஞ்சிய தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மின் துணைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. இதையடுத்து ஹைதராபாத் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தியின் போது பணம் செலுத்த ஒருநாள் கால அவகாசம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து மைதானத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதாக கிரிக்கெட் வாரிய அமைப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எனினும் இன்றைய போட்டியில் சிக்கல் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!