சீட் நுனியில் உட்காரவைத்த செம த்ரில்லான மேட்ச்.. கடைசி பந்தில் த்ரில்லான முடிவு

By karthikeyan VFirst Published Sep 29, 2019, 2:55 PM IST
Highlights

கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் செம த்ரில்லான போட்டியில் கடைசி பந்தில் பாட்ரியாட்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் பார்படோஸ் ட்ரைடண்ட்ஸ் மற்றும் செயிண்ட் கிட்ஸ்&நேவிஸ் பாட்ரியாட்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாட்ரியாட்ஸ் அணி 20 ஓவரில் 149 ரன்கள் அடித்தது. 150 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ட்ரைடண்ட்ஸ் அணி 18 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் அடித்திருந்தது. 

கடைசி 2 ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவை. ரேஃபெர் களத்தில் நின்று நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். அப்படியான சூழலில் 19வது ஓவரில் ரேஃபெர் ஒரு சிக்ஸர் அடிக்க, காட்ரெல் வீசிய அந்த ஓவரில் 13 ரன்கள் அடிக்கப்பட்டது. ஹெய்டன் வால்ஷ் அந்த ஓவரில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து கடைசி ஓவரில் ட்ரைடண்ட்ஸ் அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை. மிகவும் இக்கட்டான அந்த ஓவரை வீசிய ட்ரேக்ஸ், முதல் பந்தை வைடாக வீசினார். மீண்டும் முதல் பந்தை வீச, அதை சிக்ஸர் விளாசினார் ரேஃபெர். இதையடுத்து முதல் பந்திலேயே ட்ரைடண்ட்ஸ் அணிக்கு 7 ரன்கள் கிடைத்துவிட்டது. எஞ்சிய 5 பந்துகளில் 5 ரன்கள் தான் தேவை. அப்படியான சூழலில் இரண்டாவது பந்தில் ரேஃபரை ட்ரேக்ஸ் வீழ்த்திவிட்டார். கடைசி 4 பந்துகளில் 5 ரன்கள் தேவை. மூன்றாவது பந்தில் கடைசி வீரராக களமிறங்கிய கர்னி ஒரு சிங்கிள் எடுத்தார். நான்காவது பந்தில் சேமர் ஹோல்டர் ரன் அடிக்கவில்லை. ஐந்தாவது பந்தில் ஒரு ரன் அடித்தார். இதையடுத்து கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், அந்த பந்தை எதிர்கொண்டார் கர்னி. 

கடைசி பந்தில் கர்னி ஆட்டமிழக்க, பாட்ரியாட்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பிராத்வெயிட் தலைமையிலான பாட்ரியாட்ஸ் அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது. 
 

click me!