கோலி ஆடாததுலாம் இந்திய அணிக்கு ஒரு மேட்டரே இல்ல..! வதவதன்னு திறமைகள் குவிந்து கிடக்குறாய்ங்க - கம்மின்ஸ்

By karthikeyan VFirst Published Nov 16, 2020, 6:07 PM IST
Highlights

இந்திய அணியில் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி ஆடாதது குறித்து ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 2018-2019 சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

கடந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆடாத நிலையில், இந்த முறை அவர்கள் ஆடுவதால் கோலி மற்றும் ஸ்மித் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், இந்த முறை இந்திய அணியின் கேப்டனும் தலைசிறந்த வீரருமான விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடவுள்ளார். அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார்.

கோலி ஆடாதது ஆஸ்திரேலிய அணிக்கு அனுகூலமான விஷயம். கோலி ஆடாதது டெஸ்ட் தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனும் நட்சத்திர ஆல்ரவுண்டருமான பாட் கம்மின்ஸ், நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், கோலி ஆடாதது பற்றியெல்லாம் நாங்கள் பெரிதாக யோசிக்கவேயில்லை. கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை என்பதையே ஊடகங்களில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். கோலியை ஒரு கேப்டனாக இந்திய அணி தவறவிடும் என்றாலும், இந்திய அணியில் ஏராளமான திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். எனவே புதிய வாய்ப்பு, ஒரு வீரரின் கெரியரின் தொடக்கமாக அமையும்.

கோலி ஆடாதது சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்துமே தவிர, அதுவே தொடரை தீர்மானிக்கும் விஷயமாக அமையாது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். நாங்கள் வீரர்களாக, இதைப்பற்றி பெரிதாக யோசிக்கவோ, பேசவோ மாட்டோம் என்று கம்மின்ஸ் தெரிவித்தார்.
 

click me!