IPL 2022: முக்கியமான கட்டத்தில் கேகேஆரை அம்போனு தவிக்கவிட்டு வெளியேறிய பாட் கம்மின்ஸ்

Published : May 13, 2022, 02:18 PM IST
IPL 2022: முக்கியமான கட்டத்தில் கேகேஆரை அம்போனு தவிக்கவிட்டு வெளியேறிய பாட் கம்மின்ஸ்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து இடுப்பு பகுதியில் காரணமாக பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசன் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், லக்னோ அணியும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன.

எனவே எஞ்சிய 2 இடங்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடள்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இனிவரும் ஒவ்வொரு போட்டியுமே இந்த அணிகளுக்கு மிக முக்கியமானவை. 

அந்தவகையில், இந்த அணிகள் அடுத்தடுத்து கட்டாய வெற்றிகளை எதிர்நோக்கியுள்ள நிலையில், கேகேஆர் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

கேகேஆர் அணி இதுவரை ஆடிய 12 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், கடைசி 2 போட்டிகளில் கேகேஆர் அணி ஜெயித்து, மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் இடுப்பு பகுதியில் காயம் காரணமாக இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இது கேகேஆர் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: வெறும் 5 ஓவரில் ஜப்பானை ஊதித்தள்ளிய இந்திய மகளிர் அணி.. செமி பைனலுக்கு என்ட்ரி!
Abhishek Sharma: ஆத்தாடி! என்னா அடி! சிக்சர் மழை.. வெறும் 30 பந்தில் சதம்.. அபிஷேக் சர்மா உலக சாதனை!