பங்கஜ் சிங் 5 விக்கெட்.. பவுலிங்கில் படுமட்டமா சொதப்பிய ஸ்ரீசாந்த்..! இந்தியா மகாராஜாஸுக்கு சவாலான இலக்கு

By karthikeyan VFirst Published Sep 16, 2022, 9:59 PM IST
Highlights

லெஜண்ட்ஸ் லீக் தொடரில் இந்தியா மகாராஜாஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய உலக ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவரில் 170 ரன்களை குவித்து 171 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்தியா மகாராஜாஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு ஆடும் லெஜண்ட்ஸ் லீக் டி20 தொடர் இன்று தொடங்கியது. இன்று நடந்துவரும் முதல் போட்டியில் இந்தியா மகாராஜாஸ் மற்றும் உலக ஜெயிண்ட்ஸ் அணிகள் ஆடிவருகின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற உலக ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: நண்பன் என்பதற்காக தகுதியில்லாத பிளேயரை பாகிஸ்தான் அணியில் எடுத்த பாபர் அசாம்

இந்தியா மகாராஜாஸ் அணி:

வீரேந்திர சேவாக், ஸ்ரீவஸ்தவா, பார்த்திவ் படேல் (விக்கெட் கீப்பர்), முகமது கைஃப், மன்வீந்தர் பிஸ்லா, இர்ஃபான் பதான், யூசுஃப் பதான், ஹர்பஜன் சிங் (கேப்டன்), ஜோகிந்தர் ஷர்மா, பங்கஜ் சிங், ஸ்ரீசாந்த், அசோக் டிண்டா.

உலக ஜெயிண்ட்ஸ் அணி:

கெவின் ஓ பிரயன், ஹாமில்டன் மசகட்ஸா, ஜாக் காலிஸ் (கேப்டன்), தினேஷ் ராம்டின் (விக்கெட் கீப்பர்), திசாரா பெரேரா, டைபு, ரொமேஷ் கலுவிதாரனா, டேனியல் வெட்டோரி, டிம் பிரெஸ்னன், மாண்டி பனேசர், ஃபிடல் எட்வர்ட்ஸ், முத்தையா முரளிதரன்.

முதலில் பேட்டிங் ஆடிய உலக ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் கெவின் ஓ பிரயன் அவர் ஆடிய காலத்தில் எப்படி ஆடினாரோ, அதேபோலவே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 31 பந்தில் 52 ரன்களை விளாசினார் கெவின்.  கேப்டன் ஜாக் காலிஸ் 14 பந்தில் 12 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார்.

அதிரடியாக ஆடிய தினேஷ் ராம்டின் 29 பந்தில் 42 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். திசாரா பெரேரா 16 பந்தில் 23 ரன்கள் அடித்தார். இதையடுத்து 20 ஓவரில் 170 ரன்களை குவித்த உலக ஜெயிண்ட்ஸ் அணி 171 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்தியா மகாராஜாஸுக்கு நிர்ணயித்துள்ளது.

இதையும் படிங்க - ரோஹித், கோலியை ஆரம்பத்துலயே தூக்கிட்டா இந்தியாவை 70 ரன்களுக்கு சுருட்டலாம்! எதிரணியின் முன்னாள்கேப்டன் வியூகம்

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பங்கஜ் சிங் 4 ஓவரில்  26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்ரீசாந்த் பவுலிங்கை கெவின் ஓ பிரயன் அடித்து நொறுக்கினார். 3 ஓவரில் 43 ரன்களை வாரி வழங்கிய ஸ்ரீசாந்த் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
 

click me!