டி20 உலக கோப்பை: நண்பன் என்பதற்காக தகுதியில்லாத பிளேயரை பாகிஸ்தான் அணியில் எடுத்த பாபர் அசாம்

By karthikeyan VFirst Published Sep 16, 2022, 9:01 PM IST
Highlights

தனது நண்பன் என்பதற்காக தகுதியில்லாத பிளேயரை டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் எடுத்ததாக கேப்டன் பாபர் அசாம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், டி20 உலக கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

பாபர் அசாம் தலைமையிலான 15 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியில் அதிரடி வீரர் ஃபகர் ஜமான் மெயின் அணியில் இடம்பிடிக்கவில்லை. காயம் காரணமாக அவர் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் அசத்திய ஷாநவாஸ் தஹானியும் ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - ரோஹித், கோலியை ஆரம்பத்துலயே தூக்கிட்டா இந்தியாவை 70 ரன்களுக்கு சுருட்டலாம்! எதிரணியின் முன்னாள்கேப்டன் வியூகம்

ஆசிய கோப்பையில் காயம் காரணமாக ஆடிராத ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி காயத்திலிருந்து மீண்டதால் பாகிஸ்தான் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஷாஹீன் அஃப்ரிடி அணிக்கு திரும்பியது அந்த அணிக்கு கூடுதல் பலம். ஆசிய கோப்பையில் ஆடிராத ஹைதர் அலியும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஆசிஃப் அலி, ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஷான் மசூத், உஸ்மான் காதிர். 

ரிசர்வ் வீரர்கள் - ஃபகர் ஜமான், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.

பாகிஸ்தான் அணி தேர்வு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலமற்ற மோசமான அணியாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் விமர்சித்துவருகின்றனர். 

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும். ஸ்பின்னிற்கு பெரிதாக ஒத்துழைப்பு இருக்காது. ஆனால் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு இருக்கும். அப்படியிருக்கையில், ஃபாஸ்ட் பவுலர் ஷாநவாஸ் தஹானியை ஸ்டாண்ட்பை வீரராக மட்டுமே எடுத்துவிட்டு, ரிஸ்ட் ஸ்பின்னர் உஸ்மான் காதிரை மெயின் அணியில் எடுத்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையும் படிங்க - பாபர் அசாமிடம் படிச்சு படிச்சு சொன்னேன்; அவரு கேட்கல! இவ்ளோ சீக்கிரம் கெடுத்துட்டாங்க- முன்னாள் வீரர் வருத்தம்

கேப்டன் பாபர் அசாமின் நண்பர் உஸ்மான் காதிர் என்பதால், அணியில் இடம்பெற தகுதியில்லாத, ஆஸ்திரேலிய கண்டிஷனுக்கு தேவைப்படாத அவரை மெயின் அணியில் பாபர் அசாம் தேர்வு செய்துள்ளதாக ரசிகர்கள் டுவிட்டரில் மிகக்கடுமையாக விமர்சித்துவருகின்றனர். உஸ்மான் காதிருக்கு பதிலாக ஷாநவாஸ் தஹானியைத்தான் அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விளாசிவருகின்றனர்.

ஆசிய கோப்பை தொடரில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே  ஆடினார் உஸ்மான் காதிர். இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் ஆடிய உஸ்மான் காதிர், அந்த போட்டியில் 4 ஓவர்களில் 34 ரன்களை வழங்கி ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தார். பின்னர் ஃபைனலில் அவர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். துபாயிலேயே பென்ச்சிலேயே உட்காரவைக்கப்படும் ஸ்பின்னர், ஆஸ்திரேலிய கண்டிஷனில் தேவையே இல்லை என்பதை சுட்டிக்காட்டித்தான் ரசிகர்கள் விளாசிவருகின்றன

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஃப்ரண்ட்ஷிப் கலாச்சாரத்திற்கு முடிவுரை எழுதவேண்டும் என்று ஷோயப் மாலிக்கும் கருத்து கூறியிருந்தார். பாகிஸ்தான் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீரும் பாகிஸ்தான் அணி தேர்வை விமர்சித்துள்ளார்.
 

click me!