இந்த மேட்ச்லயும் உனக்கு சான்ஸ் இல்ல.. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் துணிச்சலான முடிவு

By karthikeyan VFirst Published Nov 5, 2019, 1:35 PM IST
Highlights

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 

முதல் டி20 போட்டி மழையால் முடிவில்லாமல் முடிந்தது. அந்த போட்டி நடந்திருந்தால் ஆஸ்திரேலிய அணி தான் வெற்றி பெற்றிருக்கும். ஏனெனில் 15 ஓவராக குறைத்து நடத்தப்பட்ட அந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 15 ஓவரில் 107 ரன்கள் அடித்தது. டி.எல்.எஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 119 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

ஆஸ்திரேலிய அணி ஃபின்ச்சின் அதிரடியால் 3.1 ஓவரில் 41 ரன்களை குவித்தது. மழை குறுக்கிட்டதால் அத்துடன் போட்டி தடைபட்டது. இன்னும் 11 பந்துகள் வீசப்பட்டிருந்தால் டி.எல்.எஸ் முறைப்படி போட்டியின் முடிவு தீர்மானமாகியிருக்கும். ஆனால் அதிர்ஷ்டத்தால் தப்பியது பாகிஸ்தான் அணி. 

இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் ஆடவிட்டு இலக்கை விரட்டுவது என்பது, முதலில் பேட்டிங் ஆடி, பின்னர் ஆஸ்திரேலிய அணியை தடுப்பதை விட எளிதாக இருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணி துணிச்சலாக முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் அனுபவமான ஃபாஸ்ட் பவுலர்களாக அமீர், வஹாப் ரியாஸ் ஆகியோர் இருப்பதால் கூட அந்த அணி தைரியமாக இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனாலும் வார்னர், ஃபின்ச், ஸ்மித் என மிரட்டலான பேட்டிங் ஆர்டரை கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மாபெரும் ஸ்கோரை அடித்து கடின இலக்கை நிர்ணயிக்க வேண்டியிருக்கும் என்பதை தெரிந்தும் அந்த் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. 

 

இந்த போட்டியிலும் தொடக்க வீரர் இமாம் உல் ஹக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஃபகார் ஜமானும் பாபர் அசாமும்தான் தொடக்க வீரர்களாக இறங்கியுள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி:

வார்னர், ஃபின்ச்(கேப்டன்), ஸ்மித், மெக்டெர்மோட், அஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா. 

பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், பாபர் அசாம்(கேப்டன்), ஹாரிஸ் சொஹைல், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, இஃப்டிகார் அகமது, இமாத் வாசிம், ஷதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர், முகமது இர்ஃபான். 

click me!