கேப்டன் கோலிக்கு பிறந்தநாள்.. சதங்களை குவிக்கும் சாதனை நாயகனின் முதல் சத வீடியோ

By karthikeyan VFirst Published Nov 5, 2019, 12:22 PM IST
Highlights

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் முதன்மையானவரும் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலிக்கு இன்று 31வது பிறந்தநாள். 
 

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து, நம்பர் 1 வீரராக திகழ்கிறார். 2008ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமான விராட் கோலி, 2011ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியில் ஆடினார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள், அதிக ரன்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை விராட் கோலி தகர்த்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 சதங்கள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்கள் என இதுவரை மொத்தம் 69 சதங்களை விளாசியுள்ளார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 100 சர்வதேச சதங்களை விளாசியிருக்கிறார். சச்சினின் இந்த சாதனையை விராட் கோலி முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே ஃபார்மில் இன்னும் 4-5 ஆண்டுகள் ஆடினால், எதிர்காலத்தில் தகர்ப்பதற்கு அரிய பல மைல்கற்களை செட் செய்துவிடுவார் கோலி. 

கோலி எத்தனை சதங்களை அடித்தாலும், முதல் சதம் என்பது ஸ்பெஷல் தானே. கோலியின் பிறந்தநாளையொட்டி, பிசிசிஐ அவர் அடித்த முதல் சதத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. 2009ம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது, கொல்கத்தாவில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில், 316 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டியபோது, கம்பீருடன் இணைந்து அபாரமாக ஆடிய கோலி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் கம்பீரும் சதமடித்தார். கம்பீருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அபாரமாக ஆடிய கோலி, தனது முதல் சதத்தை அடித்து இந்திய அணி வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார். 

அந்த வீடியோ இதோ.. 

As Captain turns 31, we take a look back at his maiden ODI hundred and where it all started for the Run Machine. 🎂💐💐 pic.twitter.com/6vNY1U4p8H

— BCCI (@BCCI)
click me!