T20 World Cup: India vs Pakistan டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங் தேர்வு..! இந்திய அணியில் தமிழக வீரருக்கு இடம்

By karthikeyan VFirst Published Oct 24, 2021, 7:18 PM IST
Highlights

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று போட்டியில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் ஆடுவதால் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உலக கோப்பைகளில் இந்திய அணியை ஒருமுறை கூட வீழ்த்திராத பாகிஸ்தான் அணி, முதல் முறையாக உலக கோப்பையில் வீழ்த்தும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. உலக கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான 100 சதவிகித வின்னிங் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி ஆடுகிறது. 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துபாயில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.

இந்திய அணியின் ஆடும் லெவனில் இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அஷ்வின் மற்றும் ராகுல் சாஹர் ஆகிய நால்வருக்கும் இடம் இல்லை. தமிழகத்தை சேர்ந்த இளம் மாயாஜால ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. சீனியர் ஸ்பின்னர் அஷ்வினுக்கு இடம் இல்லை.

இந்திய அணி:

ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, வருண் சக்கரவர்த்தி.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப்.
 

click me!