2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் 2 அதிர்ச்சிகர மாற்றங்கள்.. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Aug 13, 2020, 3:27 PM IST
Highlights

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 
 

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி, முதலில் பேட்டிங் ஆட தீர்மானித்து பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. ஸ்பின்னர் ஷதாப் கானுக்கு பதிலாக பேட்ஸ்மேன் ஃபவாத் ஆலம் சேர்க்கப்பட்டுள்ளார். இது எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் தான்.

ஆனால் இங்கிலாந்து அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று மிகவும் வியக்கத்தக்க மாற்றம். இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னரும் நட்சத்திர ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டு, பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி சேர்க்கப்பட்டுள்ளார். அணியின் மேட்ச் வின்னரை இங்கிலாந்து இந்த போட்டியில் நீக்கும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. மேலும் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டு சாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), ஓலி போப், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

பாகிஸ்தான் அணி:

ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி(கேப்டன்), பாபர் அசாம், ஆசாத் ஷாஃபிக், ஃபவாத் ஆலம், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), யாசிர் ஷா, முகமது அப்பாஸ், நசீம் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி.
 

click me!