#PAKvsSA டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..! முக்கியமான வீரர்கள் டீம்ல இல்ல

Published : Jan 31, 2021, 04:12 PM IST
#PAKvsSA டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு..! முக்கியமான வீரர்கள் டீம்ல இல்ல

சுருக்கம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி முடிந்துள்ளது. 2வது போட்டிக்கு பின்னர், டி20 தொடர் நடக்கவுள்ளது.

இந்நிலையில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி, முகமது ரிஸ்வான், ஃபஹீம் அஷ்ரஃப், சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப், ஹசன் அலி, உஸ்மான் காதிர், ஆசிஃப் அலி, இஃப்டிகார் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முகமது ஹஃபீஸ், வஹாப் ரியாஸ், இமாத் வாசிம், ஷதாப் கான், ஃபகர் ஜமான் ஆகிய முக்கியமான வீரர்கள் பல்வேறு காரணங்கள் காரணமாக அணியில் எடுக்கப்படவில்லை. முகமது ஹஃபீஸ் டி10 லீக்கில் ஆடிவருகிறார்; இமாத் வாசிம் குடும்ப பிரச்னையால் ஒதுங்கியுள்ளார்; ஷதாப் கான் காயம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் அணியில் இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் டி20 அணி:

பாபர் அசாம்(கேப்டன்), ஹைதர் அலி, குஷ்தில் ஷா, ஹுசைன்  டலட், டானிஷ் அஜீஸ், ஆசிஃப் அலி, இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஜஃபார் கோஹர், ஃபஹீம் அஷ்ரஃப், ஆமீர் யாமின், அமத் பட், முகமது ரிஸ்வான், சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப், முகமது ஹஸ்னைன், ஹசன் அலி, உஸ்மான் காதிர், ஜாஹீத் மெஹ்மூத்.
 

PREV
click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பை: இதுக்கு மேல சான்ஸ் இல்ல.. அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்? இளம் வீரர் கம்பேக்!
சிஎஸ்கே-வின் அடுத்த கேப்டன் சஞ்சு சாம்சனா? தோனியின் ஓய்வு குறித்து வெளியான அதிரடித் தகவல்! ஐபிஎல் 2026 மெகா ஏலம் அப்டேட்!!